கரூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. வழிப்பறி, கொள்ளை, திருட்டு, வாகனங்கள் கடத்தல், பாலியல் குற்றங்கள் போன்ற பல்வேறு குற்றச் சம்பவங்கள் தொடர் கதையாக இருந்து வருகிறது.
இந்த குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களை தடுப்பது மற்றும் கண்டுபிடிப்பதற்கு ஏதுவாக புதிதாக ரேஸ் குழு ஒன்றை மாவட்ட எஸ்பி உருவாக்கியுள்ளார். அதன்படி, கரூரில் உள்ள 17 காவல் நிலையங்களுக்கு தலா ஒரு வாகனம் வீதம் மொத்தம் 17 இருசக்கர வாகனங்களை மாவட்ட எஸ்பி பகலவன் வழங்கியுள்ளார்.
மேலும், பொதுமக்கள் குற்றச் சம்பவங்கள் குறித்து புகாரளிக்க 9498181222 என்ற தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளனர். இந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டால் அடுத்த சிறிது நேரத்தில் சம்பவ இடத்தில் காவல்துறையினர் இருப்பார்கள் என தெரிவித்துள்ளனர்.