ETV Bharat / state

தனியார் நிறுவனத்திற்கு எதிராக சாலை மறியல்! - public protest against the private company

கரூர்: விபத்தில் சிக்கியவரின் மேல் சிகிச்சைக்கு உதவாத தனியார் நிறுவனத்தைக் கண்டித்து ஓட்டுநரின் உறவினர்கள் கரூர் மருத்தவமணை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

puplic protest against the private company in karur
author img

By

Published : Sep 26, 2019, 11:11 PM IST

கரூர் மாவட்டம் உடையாம்பாளையம் பகுதியில் விக்டோரியா பேப்பர் போட் என்கிற டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் இயங்கிவருகிறது. இதில் பணியாற்றும் 15க்கும் மேற்பட்ட ஊழியர்களை ஏற்றிச்சென்ற வேன், எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் சினேகா(22) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதில் படுகாயமடைந்த வேனின் ஓட்டுநர் கோவை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தனியார் நிறுவனத்திற்கு எதிராக சாலை மறியல்

உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி காவல் துறையினர் விசாரித்து வந்தனர். இந்நிலையில், முருகனின் மருத்துவ செலவிற்காக பேப்பர் போட் நிறுவனம் எந்த ஒரு உதவியும் செய்யாமல் மெத்தனமாக இருந்ததே முருகனின் இறப்புக்கு காரணம் என்றும் அவரது குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என்று கூறியும் அவரது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படிங்க: மாருதி வேனில் பற்றி எறிந்த தீ - பொதுமக்கள் பீதி

Intro:கரூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த கூலித்தொழிலாளர்கள் சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்து இதில் இருவர் பலியானார்.

Body:கரூர் அருகே தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த கூலித்தொழிலாளர்கள் சென்ற அரசு பேருந்து மீது மோதி விபத்து இதில் இருவர் பலியானார்.

நஷ்ட ஈடு வழங்க கோரியும் அந்த தனியார் நிறுவன உடனடியாக மூட கோரியும் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கரூர் மாவட்டம் கே பரமத்தி எடுத்த கார் உடையாம்பாளையம் பகுதியில் இயங்கும் விக்டோரியா பேப்பர் போட் என்கின்ற டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்த நிலையில் இந்த நிறுவனத்தில் பணியாற்றிய 15 இற்கும் மேற்பட்ட ஏற்றிவந்த டெம்போ நேற்று மாலையில் இருந்து புறப்பட்டது இந்நிலையில் கரூர் கோவை சாலையில் சென்ற அரசு பேருந்து எதிரே வந்த அந்த டெம்போ வேன் மோதியதில் சம்பவ இடத்திலேயே சினேகா வயது 22 என்ற பெண் தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார் நிலையில் மேல் சிகிச்சைக்காக கவலைக்கிடமான நிலையில் இருந்த டிரைவர் முருகன் என்பவர் கோவைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார் இருவர் உடலும் கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு பரமத்தி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர் நிலையில் தனியார் நிறுவனம் விக்டோரியா பேப்பர் போட் நிறுவனத்தில் மெத்தன போக்கால் முருகன் அநியாயமாக உயிரிழந்தார் என்றும் உரிய சிகிச்சை அளிக்காததால் முருகன் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள் சிகிச்சைக்கு எந்த வித பணமும் அளிக்கவில்லை என்றும் இவரது உயிரை பலிவாங்கிய இந்த தனியார் நிறுவனம் இந்த இவரது குடும்பங்களுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க கோரியும் அதை விபத்தில் படுகாயமடைந்த 9 நபர்கள் சிகிச்சைக்காக அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் மேல் சிகிச்சைக்காக எந்த உதவித்தொகையும் வழங்காததால் அந்த தனியார் நிறுவனமான விக்டோரியா பேப்பர் போர்ட் நிறுவனத்தை மூடக்கோரி எதிர்ப்பலைகள் ஒலிக்கத் தொடங்கின இந்த சம்பவத்தால் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.