ETV Bharat / state

புதிய குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் போராட்டம் - குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு

கரூர்: பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில் புதிய குடிநீர் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துப் போராட்டம் நடத்தினர்.

புதிய குடிநீர் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

author img

By

Published : May 14, 2021, 6:13 PM IST

கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சியில், புதிய குடிநீர் திட்டத்திற்குப் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஜேசிபி வாகனத்தை முற்றுகையிட்டனர்.

இதைத்தொடர்ந்து அலுவலர்கள் நடத்திய பேச்சுவார்த்தையால் மண்ணில் பதிக்கப்பட்ட குழாய்கள் நீக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இது குறித்து எம்.புதுப்பட்டியைச் சேர்ந்த அருண்குமார் கூறியதாவது, "கடந்த 25 ஆண்டுகளாக காவிரி ஆற்றங்கரையில் இருந்து பழைய ஜெயங்கொண்டம் பேரூராட்சிக்குட்பட்ட ஓமந்தூர், குப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

புதிய குடிநீர் திட்டத்திற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

தற்பொழுது பழைய ஜெயங்கொண்டம் பகுதிக்கு 1 லட்சம் கொள்ளளவில் குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி அமைத்து, சிவன் கோயில் பகுதியில் இருந்து மேட்டுமகாதானபுரம் வழியாக காவிரி ஆற்று நீரைக் கொண்டு செல்லும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் காரணமாக ஏற்கனவே உள்ள 5க்கும் மேற்பட்ட கிராமங்களுக்குத் தண்ணீர் விநியோகம் முறையாக வழங்கப்படுவதில்லை. நான்கு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் கிடைத்தாலும்; அடிக்கடி குழாய் உடைப்பு ஏற்படுகிறது.

ஏற்கெனவே கடந்த டிசம்பர் மாதம் இக்குழாய் பதிக்கும் பணி தொடங்கியபோது, போராட்டம் நடத்தினோம். தற்போது மீண்டும் போராட்டம் நடத்தியதையடுத்து குழாய் பதிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன" என்றார்.

இதையும் படிங்க: ஊரடங்கு விதிகள் பின்பற்றாத சூழல்: கெடுபிடி அதிகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.