கரூர் மாவட்டம் கடவூர் கிராமம் பொம்மநாயக்கன்பட்டி ஊர் மக்கள் அப்பகுதியில் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் கட்டக் கோரி கடந்த 2010ஆம் ஆண்டு 1.81 ஏக்கர் நிலத்தை பள்ளிக் கல்வித் துறைக்கு தானமாக அளித்துள்ளனர். இதற்காக 2014ஆம் ஆண்டு ஜுன் ஆறாம் தேதி ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்துள்ளனர்.
ஆனால் அதற்கு பதிலாக அங்கிருந்த நடுநிலைப் பள்ளியை பள்ளிக் கல்வித் துறையினர் தரம் உயர்த்தியுள்ளனர். இதனால் மீண்டும் வகுப்பறைகள் மரத்தடியில் நடைபெற்று வருகிறது.
எனவே இன்று (நவ.4) அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு உயர்நிலைப்பள்ளி கட்டடம் உடனடியாக கட்டக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதன்பிறகு ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே அவர்கள் திடீரென அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அநீதிக்கு எதிராக வெற்றிப்பெற்ற தனிமனித போராட்டம்!