தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பாமகவினர் மதுக்கடைகளை மூடக்கோரியும், மாநில அரசைக் கண்டித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் பாஸ்கரன் தலைமையில், அவரது வீட்டின் முன்பு 10க்கும் மேற்பட்டோர் கறுப்புக்கொடி ஏந்தி மதுக்கடைகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'ஏமாற்று வேலையா'
கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், மாவட்டத் தலைவர் ராஜேஷ் கண்ணா, மாவட்டத் துணை செயலாளர் ராஜா, கரூர் நகர செயலாளர் முருகேசன், நகர தலைவர் பாலமுருகன், தொழிற்சங்கத் தலைவர் செல்வராஜ், இளம்பெண்கள் அணி மாநில செயலாளர் கிரிஜாஸ்ரீ, மாணவர் அணி மாநில துணைச் செயலாளர் ஹரிராஜ், நகர அமைப்பு செயலாளர் வேல்முருகன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பாமகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்கள், “தேர்தலுக்கு முன்பாக திமுக தலைவர் மதுக்கடைகளை மூடுவோம் என்று கூறியது ஏமாற்று வேலையா. கரோனா காலத்தில் திறக்கபட்ட மதுக்கடைகளை மூட வேண்டும்” என்று வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.