கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, சின்னதாராபுரம், ஈசநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்துவருகிறார்கள். இதையடுத்து அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலையை ஆதரித்து தாமரை சின்னத்தில் வாக்கு அளிக்குமாறு வரையப்பட்டிருக்கிறது.
அத்துடன் அதில் 'பாரத் மாதா கி ஜே' என்ற கோஷங்களும் இடம்பிடித்திருந்தன. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதாகக் கூறப்பட்ட நிலையில், அந்த கோஷம் தற்போது தற்காலிகமாக நீக்கப்பட்டது.
அத்தோடு இல்லாமல் மிக முக்கியமாகப் பிரதமர் மோடியின் ஆசிபெற்ற வேட்பாளர் அண்ணாமலை என்று எழுதப்பட்ட வாசகங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது 'இதய தெய்வம் அம்மா ஆசிபெற்ற வேட்பாளர்' எனவும் மாற்றப்பட்டுள்ளது. இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.
அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி முழுவதும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வேட்பாளர் அண்ணாமலையின் வாழ்க்கை வரலாறு காணொலி குறும்படமாக ஒளிபரப்புச் செய்யப்பட்டுவருகிறது. இதிலும் பிரதமர் மோடி குறித்தும், மத்திய அரசின் சாதனைகள் குறித்தும் ஏதும் இடம்பெறவில்லை எனத் தெரிகிறது.
இதையும் படிங்க: ’உண்மையில் நான்தான் பிக்பாஸ்’ - சீமான் பரப்புரை