கரூர் மாவட்டம் குளித்தலை வட்டத்திற்குள்பட்ட பொய்யாமணி ஊராட்சி திருச்சாப்பூரைச் சேர்ந்த விவசாயிகள், பொதுமக்கள் ஆகியோர் குள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி துணை ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், “பொய்யாமணி ஊராட்சி, திருச்சாப்பூர் அய்யனார் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஒரு குளம் இருக்கிறது. சுமார் 2 1/2 ஏக்கர் பரப்பளவுகொண்ட இந்தக் குளத்தை, விவசாயத் தேவைகளுக்காகவும், குடிநீருக்காகவும் பொதுமக்கள் பயன்படுத்திவந்தனர்.
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, தனி ஒருவரால் ஆக்கிரமிக்கப்பட்ட குளம் விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், கிராம விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் தவித்துவருகின்றனர்.
மேலும், ஆழ்துளைக் கிணறு பயன்பாட்டிலிருந்த போதிலும் நீர்த்தேவை பற்றாக்குறையாகவே உள்ளது. குளத்தைச் சுற்றியிருந்த விவசாய நிலங்களில் தண்ணீர் வடிகாலாகவும், கிராம மக்களின் நீர் ஆதாரமாகவும் இருந்து வந்த குளத்தின் ஆக்கிரமிப்பை அகற்றி மீண்டும் குளத்தினைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
இதையும் படிங்க: கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவு!