ETV Bharat / state

பெயிண்டிங் தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை - தமிழ்நாடு தொழிலாளர்களின் வருவாய் பாதிப்பு

வெளிமாநிலத் தொழிலாளர்களால் தமிழர்களுக்கு வேலை இழப்பு ஏற்படுவதாக தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்டர் அசோசியேசன் மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

வடமாநிலத் தொழிலாளர்களை தமிழ்நாட்டை விட்டு விரட்ட வேண்டும்- பெயிண்டர் நல சங்கம்

author img

By

Published : Jan 23, 2023, 6:26 AM IST

பன்னீர்செல்வம்

கரூர்: வெளி மாநில தொழிலாளர்களால் உள்ளூர் தொழிலாளர்கள் வருவாய் இழந்து வருவதாக தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் அசோசியேசன் தலைவர் பன்னீர்செல்வம் தெரிவித்தார் . தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்ட் அசோசியேசனின் 10ஆம் ஆண்டு தொடக்க விழா மற்றும் கரூர் மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா கரூரில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று (ஜனவரி 22) நடைபெற்றது .

அதில் தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்டர் அசோசியேசன் மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார் . அப்போது அவர், தமிழ்நாடு முழுவதும் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு நல வாரியம் அமைக்க வேண்டும். பெயிண்டிங் தொழிலாளர்கள் பணியின் போது உயிரிழந்தால் நிவாரணத் தொகை தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்.

வட மாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்படுவதால் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு பணி இழப்பு மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. வெளி மாநில தொழிலாளர்களை தமிழக அரசு கட்டுப்படுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் தமிழ்நாடு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் செல்லமுத்து, செயலாளர் ரஞ்சித்குமார், பொருளாளர் கந்தசாமி கிழக்கு மாவட்ட தலைவர் ஆர்.ஜஸ்டின் ராமன், செயலாளர் ஆர்.எம்.சந்தர்சேகர், கிழக்கு மாவட்ட பொருளாளர் என்.தாமோதரன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: பட்டமளிப்பு விழாவில் அருகருகே நின்ற ஆளுநர் ரவியும், பொன்முடியும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.