ETV Bharat / state

'பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற திமுகவுக்கு பாடம் புகட்டுங்கள்'- ஓபிஎஸ்

தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து வெற்றி பெற்ற திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்ட வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பேசியுள்ளார்.

ops election campaign at karur
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்
author img

By

Published : Feb 11, 2022, 9:55 AM IST

கரூர்: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் அறிமுகம் மற்றும் பரப்புரைக் கூட்டம் வேலாயுதம்பாளையம் தனியார் திருமண மண்டபத்தில் பிப். 10ஆம் தேதி இரவு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், 'தமிழ்நாட்டில் 30 ஆண்டுகள் காலம் ஆட்சி செய்த வரலாறு அதிமுகவிற்கு மட்டுமே உள்ளது. 1.5 கோடிக்கும் அதிகமான தூயத் தொண்டர்களைக் கொண்ட இயக்கம் அதிமுக.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம்

வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத ஆட்சி

வீடு இல்லாத ஏழைகளுக்கு 5.5 லட்சம் வீடுகளை வழங்கியது. ஏழைப் பெண்களுக்கு தாலிக்கு தங்கம், வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அரசு மானியத்துடன் கூடிய இரு சக்கர வாகனம், மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி உள்ளிட்டப் பல்வேறு திட்டங்களை அதிமுக அரசு 10 ஆண்டுகளில் நிறைவேற்றியுள்ளது. ஆனால், பத்தே மாதத்தில் திமுகவின் சாயம் வெளுத்து விட்டது.

திமுக ஆட்சி என்பது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற முடியாத ஆட்சி. பொய்யான வாக்குறுதிகளை அளித்த அவல ஆட்சி. நீட் தேர்வு ரத்தை முதல் கையெழுத்திடுவதாகக் கூறினார்கள். அதனை நிறைவேற்ற முடியாத கையாலாகாத ஆட்சி.

நீட் தேர்வு ரத்து செய்யப்படவேண்டும் என்பதுதான் அதிமுகவின் கோரிக்கையும். நீட் தேர்வை கொண்டு வந்தது காங்கிரஸ், திமுக கூட்டணி அரசுதான்.

வாரிசு சட்சி

அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட இந்த மேடையில் அமரமுடியும். ஒருங்கிணைப்பாளராக, இணை ஒருங்கிணைப்பாளராக ஆக முடியும்.

ஒரு சாதாரண தொண்டனான ஓபிஎஸ், ஈபிஎஸ் முதலமைச்சர் ஆகலாம். வாரிசு கட்சியில் இது முடியுமா? ஆட்சி பொறுப்புக்கு வந்து உருப்படியான நடவடிக்கைகள் திமுக அரசில் இல்லை. பெண்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நிறைவேற்றியது, அதிமுக அரசு.

நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தலும் வருகின்ற வாய்ப்பு உள்ளது. இந்த நிலை நீடித்தால் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும். அதிமுக வெற்றிபெறக்கூடிய சாதகமான சூழ்நிலை நிலவுகிறது.

பொய்யான வாக்குறுதி அளித்து வெற்றிபெற்ற திமுகவுக்கு சரியான பாடம் புகட்டுகின்ற தேர்தல் இதுவாக இருக்கும்.

திமுகவை படுதோல்வி அடையச்செய்து அனைத்து உள்ளாட்சிகளிலும் அதிமுக வெற்றிபெறவேண்டும். கரூர் மாவட்டத்தில் 100 விழுக்காடு வெற்றி பெறவேண்டும். மீண்டும் நன்றி சொல்ல இதே அரங்கிற்கு நான் வருவேன்” எனப் பேசினார்.

இதையும் படிங்க: 'தலைக்கு தில்ல பார்த்தீயா..!' - பாஜக தலைமை அலுவலகத்தில் அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.