கரூரில் தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி செய்தியாளர்களைச் சந்தித்து பேசும்போது, ‘ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கீழ் பவானி பாசனம் உள்ளது. அட்டவணைப்படி ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி தண்ணீர் திறப்பது வழக்கம், ஆனால் 16ஆம் தேதி தான் தண்ணீர் திறந்தார்கள். திறந்த உடனே 26ஆம் தேதியே தண்ணீரை நிறுத்திவிட்டார்கள், ஆகவே பல இடங்களில் தண்ணீரைத் தேடி பாசனங்கள் உள்ளதால் வரும் 31ஆம் தேதி வரை தண்ணீரை நீட்டிக்க வேண்டும்’ என்றார்.
தொடர்ந்து பேசியவர், ‘வரும் 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15ஆம் தேதி முதல் 12 மாநிலங்களில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்கின்ற திட்டத்தினை அமல்படுத்த உள்ளதற்கு தமிழ்நாடு கள் இயக்கம் வரவேற்கிறது. விரைவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்த வேண்டுமென்றும், குடிமகன் ஒருவர் கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை அந்த ரேஷன் பொருட்களைப் பெறுவதற்கு நல்ல வாய்ப்பாக இருக்கும்.
மேலும், ரேஷன் கார்டில் உள்ளவர்கள் முகவரி மாற்றத்திற்கு லஞ்சம் பெருமளவில் அவலநிலை உள்ளது. இதனால் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தினை அறிமுகப்படுத்திவிட்டால் அப்படிப்பட்ட சிரமங்கள் மக்களுக்கு இருக்காது. இதன் மூலம் இந்திய ஜனநாயகத்தின் ஒருமைப்பாட்டினையும், இறையாண்மையையும் வலுப்படுத்தும்.
தமிழ்நாட்டில் இந்தத் திட்டம் வந்தால் எதிர்க்கட்சிகள் போராட்டம் செய்யவேண்டிய அவசியம் இல்லை, ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்லும் குடும்பம் அலையும், அலைச்சல் கொஞ்சம் நஞ்சமல்ல. அப்படி நடப்பவர்களுக்குதான் அந்த கஷ்டம் தெரியும் போராடுபவர்களுக்கு அந்த கஷ்டம் தெரியாது" எனக் கூறினார்.
இதையும் படிங்க:
‘ஒரே நாடு, ஒரே ரேஷன்’ திட்டத்தால் ஆபத்து - டி.டி.வி. தினகரன்