ETV Bharat / state

தமிழக நிதியமைச்சரின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது - கே. பாலகிருஷ்ணன் - தமிழக நிதியமைச்சரின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது -கே. பாலகிருஷ்ணன்

பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்த முடியாது என தமிழக நிதியமைச்சர் சட்டசபையில் கூறியுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக நிதியமைச்சரின் சட்டசபை அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது -சிபிஎம் பாலகிருஷ்ணன்

author img

By

Published : May 9, 2022, 9:33 AM IST

கரூர் : பல்வேறு நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காக கரூர் வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சுங்ககேட்டில் உள்ள அக்கட்சியின் மாவட்டஅலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அவர் கூறியதாவது, “தர்மபுரி ஆதீனம் விழாவில் ஆதினத்தை பல்லக்கில் தூக்கி செல்லும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுதொடர்பாக விரும்பி தான் பல்லக்கு தூக்கிறார்கள் என்ற கூறுவதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏற்காது. ஒருவர் விரும்புகிறார் என்பதற்காக, ஒருவர் விருப்பத்திற்காக, பல்லக்கு தூக்க அனுமதிக்க கூடாது. சட்டத்தின் அடிப்படையில் தான் செயல்பட வேண்டும். பல இடங்களில் பல்லக்கு தூக்கும் நடைமுறை கைவிடப்பட்டுள்ளது.பழைய ஆதீனங்கள் கைவிட்ட பழகத்தை மீண்டும் முயற்சிப்பது ஏற்புடையது அல்ல.

சம்பரதாயம் பழக்கவழக்கம் என்ற அடிப்படையிலும் அனுமதிக்க முடியாது . பல்லக்குத் தூக்கும் விவகாரம் என்பது பழைய நிலபிரபுத்துவ முறையை நினைவூட்டுகிறது .மனிதனை மனிதனே சுமப்பது என்பது காலங்காலமாக இருந்து வருவதை தமிழக அரசு சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி கைவிட வலியுறுத்த வேண்டும்.

இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி அரசியல் செய்வதால் எந்தப் பயனும் இல்லை. குறிப்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழக அரசு அனுமதி அளிக்காவிட்டால் தானே சென்று பல்லக்கு தூக்குவேன் என்று கூறுவது சரியல்ல. அவர் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்துள்ளார். இவரைப்போல தூக்குவதை தடுப்பதற்கு நான்கு பேர் செல்ல நினைத்தால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்னவாகும் தேவையில்லாமல் இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சி தலையிடும் போக்கை கைவிட வேண்டும்.

ஜவுளி உற்பத்திக்கான மூலப் பொருள்கள் விலையேற்றம்,நூல் விலையேற்றமானது ஜவுளி தொழில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த விலையேற்றம் மூலம் ஜவுளி தொழிலை முடக்க நினைக்கிறதா இல்லை இந்த தொழிலை குஜராத்திற்கு எடுத்துச்செல்ல திட்டமா? மத்திய அரசு என்ன நினைக்கிறது.

சமையல் எரிவாயு விலையை மனசாட்சி இல்லாமல் ஏற்றுகிறார்கள், ஒரு வருடத்தில் 380 ரூபாய் விலையேற்றம் செய்துள்ளனர், பெட்ரோல் டீசல் விலையும் உயர்த்தி வருகிறது, செஸ் வரி மூலம் 28 லட்சம் கோடி வருவாய மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த முடியாது என தமிழக நிதியமைச்சர் தமிழக சட்டசபையில் கூறி இருப்பது ஆசிரியர்கள்,அரசு ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் சிலவற்றை நிறைவேற்றி இருந்தாலும், மீதமுள்ள வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். இதன் மூலம் ஏழை, எளிய பல்வேறு சமுதாயத்தினர் பயனடைவர்.

நிதி அமைச்சரின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது ஏமாற்றமளிக்கிறது. நிதிச்சுமையை காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் ஒவ்வொரு கூட்டத்திலும் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் என கூறுகிறார். அரசு ஊழியர்களின் கோரிக்கையை நிராகரிக்கும் வகையில் கூறியிருப்பது தமிழக முதலமைச்சரின் கருத்துக்கு எதிராக நிதி அமைச்சர் செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஓய்வுபெறும் வயதில் பென்சன் திட்டம் முன்பு இருந்த அரசுகள் வழங்கியுள்ளது. அந்த அரசுகள் நிதி சுமை என்று கூறவில்லை. தற்பொழுது நிதி சுமை என்று கூறி பழைய பென்ஷன் திட்டம் வாய்ப்பே இல்லை என்று கூறுவது தொழிலாளர்களை அரசு ஊழியர்களை ஏமாற்றம் அடைய செய்துள்ளது. இது குறித்து தமிழக முதலமைச்சர் தெளிவுபடுத்த வேண்டும். பழைய பென்ஷன் திட்டம் நிதி சுமையால் விரைவில் நிறைவேற்றப்படும் என கூறலாம். ஆனால் சாத்தியமே இல்லை என்று கூறுவது குறித்து முதலமைச்சர் தெளிவான அறிக்கை வெளியிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது என்று கூறினார்.

மேலும் நீர்நிலை புறம்போக்கு கள்ளிகுடி உள்ள ஏழை எளிய மக்களை அப்புறப்படுத்தும் விதமாக நீதிமன்றங்கள் தீர்ப்பு அளிப்பது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இதனால் நீதிமன்ற உத்தரவுப்படி குடியிருப்புகள் அகற்றப்பட்டு வருகிறது நீதிமன்றம் தீர்ப்பு வழங்கும் முன் நீர்நிலை புறம்போக்கு நிலத்தில் தற்போது நீர் வழிப்பாதை உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தி விட்டு ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும்” என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க : பழைய ஓய்வூதியத் திட்டத்துக்கு மாறுவதில் சிக்கல் உள்ளது - நிதியமைச்சர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.