ETV Bharat / state

செவிலியர் திடீர் ஸ்டிரைக்; கரூர் ஜி.எச்.,யில் நோயாளிகள் அவதி! - கரூர் போராட்டம்

கரூர்: அவசர சிகிச்சைப் பிரிவில் சுழற்சி முறையில் செவிலியர்களை நியமிக்க வேண்டும் உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் அரசு மருத்துவமனை செவிலியர் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

nurse
author img

By

Published : Jun 5, 2019, 11:28 PM IST

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவிலியரின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஊழியர் விரோத போக்கை கடைப்பிடிப்பதாகக் கூறி, அங்கு பணிபுரியும் செவிலியர்கள், இன்று காலை முதல் மருத்துவமனை முன்பாக அமர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவசர சிகிச்சைப் பிரிவில் சுழற்சி முறையில் செவிலியரை நியமிக்கப்பட வேண்டும். அனைத்து நோயாளிகள் பிரிவிலும் செவிலியருக்கான கழிப்பிட வசதிகள் செய்து தரவேண்டும். ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள ரத்தப் பரிசோதனை ஆய்வக நிபுணர் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இவர்களிடம் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரோஸி வெண்ணிலா, கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா ஆகியோர் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு எட்டப்படும் என்று உறுதி அளித்ததால், போராட்டத்தைக் கைவிட்டு செவிலியர் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

செவிலியர் வேலைநிறுத்தப் போராட்டம்

செவிலியர்களின் போராட்டத்தால் அவசர நோயாளிகள் பிரசவ வார்டு, புற நோயாளிகள் பிரிவு பகுதியில் உரிய மருத்துவச் சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Intro:அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முன்பு செவிலியர்கள் கல்லூரி முதல்வரை கண்டித்து போராட்டம்

Body:கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முன்பு மருத்துவமனை முதல் மழை கண்டித்து செவிலியர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டம்.

அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வராகப் பொறுப்பு வசிக்கும் மருத்துவர் ரோஸி வெண்ணிலா செவிலியர்களின் நிலை புறக்கணிப்பதாகும் விசாரணை என்ற பெயரில் பொதுமக்கள் முன்னிலையில் அசிங்கப்படுத்துவது செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஊழியர் விரோத போக்கை கடைபிடிப்பதாக கூறி இன்று காலை முதல் பணிக்குச் செல்லாமல் மருத்துவமனை வளாகத்தில் திடீர் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் அவர்கள் ஈடுபட்டனர் இதனால் அவசர நோயாளிகள் பிரசவ வார்டு மற்றும் புற நோயாளிகள் பிரிவு பகுதியில் உரிய மருத்துவ சிகிச்சை கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
நண்பகல் அளவில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் நோக்கி வெண்ணிலா மற்றும் கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை ஐந்து பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

செவிலியர்கள் இது குறித்து கூறுகையில்:-

அவசர சிகிச்சைப் பிரிவில் சுழற்சி முறையில் செவிலியர்களை நியமிக்கப்பட வேண்டும் அனைத்து நோயாளிகள் பிரிவில் செவிலியருக்கான கழிப்பிட வசதிகள் செய்து தரவேண்டும் ரத்த பரிசோதனை மேற்கொள்ள ரத்த பரிசோதனை ஆய்வக நுட்பனர் நியமிக்கப்படவேண்டும் செவிலியர்களின் பண பலன்கள் நிறுத்தி வைக்கும் போக்கை கைவிட வேண்டும் ஒப்பந்த பணியாளர்களை நியமித்து உள்ள தனியார் நிறுவனத்தில் பார்வைகளை அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முறையாக பணியாற்ற வேண்டும் விசாரணை என்ற பெயரில் செவிலியர்களை பொது இடங்களில் அவமானப்படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 14 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடியோ ftp மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

file name:-

TN_KRR_01_05_GOVT_GH_NURSES_PROTEST_TN7205677

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.