கரூர் மாவட்டத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. அம்மாவட்டத்தில் இதுவரை 328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 189 பேர் குணமடைந்துள்ளனர். ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் மாலை 6 மணி வரை மட்டுமே அனைத்துக் கடைகளும் செயல்பட வேண்டுமென அறிவித்திருந்தார்.
இந்நிலையில், கரூர் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள ஸ்ரீ கணேஷ் தங்கநகைக் கடை ஊழியர்கள் ஆறு மணிக்கு மேலாகியும் கடையைப் பூட்டாமல் வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்தனர். காவல் துறையினர் ஆறு மணிக்கு முன்பே வீதிகளில் உள்ள கடைகளை மூட எச்சரித்துச் சென்றனர். இருப்பினும், கடை திறந்திருப்பதைக் கண்ட நகராட்சி நிர்வாகம், கடையைப் பூட்டி சீல் வைத்தனர்.
இதையும் படிங்க:உரிமம் இல்லாமல் செயல்பட்ட 'மூலிகை மைசூர்பா' கடைக்குச் சீல் - உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி