தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2018-2019ஆம் ஆண்டுக்கான ஏழாவது மாநில உயர்நிலைக் குழுவின் பரிந்துரைப் படி, திடக்கழிவு மேலாண்மை பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளுக்காக வீடுவீடாக குப்பைகளைச் சேகரிக்க துப்புரவு தொழிலாளர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதற்காகத் பேட்டரி மூலம் இயங்கும் 85 வாகனங்கள் மற்றும் 11 இலகு ரக வாகனங்களைக் கரூர் நகராட்சி துப்புரவுப் பணியாளர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் இந்நிகழ்வைக் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.