கரூர் மாவட்டம் செங்குந்தபுரம் இரண்டாவது தெருவில் உள்ள மாவட்ட நுகர்வோர் கூட்டுறவுப் பண்டக சாலையில் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய் என விற்பனையை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.
இது குறித்து அவர் தெரிவித்ததாவது, "பெரிய வெங்காயத்தின் விளைச்சல், வரத்துக் குறைவு காரணமாக வெளிச்சந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கிட்டத்தட்ட 120 ரூபாய் வரை விற்கப்படும் வெங்காயத்தின் விலையால் பொதுமக்கள் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் இணைந்து ஒரு கிலோ 45 ரூபாய் வெங்காயம் விற்க ஆணையிட்டது. அதனடிப்படையில் நுகர்வோர் கூட்டுறவுப் பண்ட கசாலையில் பயனாளிகளுக்கு ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது" என்றார்.
மேலும் ஒரு கிலோ வெங்காயம் 45 ரூபாய்க்கு கரூர் மாவட்டத்தில் உள்ள வையாபுரி நகர், வேலுச்சாமி புரம், வெங்கமேடு, ராயனூர், மண்மங்கலம், உப்பிடமங்கலம், அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, புகழூர், பாகநத்தம், பாலவிடுதி, பாகநல்லூர், தரகம்பட்டி, கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி, பெரிய குளத்துபாளையம் போன்ற பகுதியில் வசிப்பவர்கள் நுகர்வோர் கூட்டுறவு சிறப்பங்காடி மூலம் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி பசுமை பண்ணையில் 3.5 டன் வெங்காயம் விற்பனை - ஆட்சியர் சந்தீப் நந்தூரி