ETV Bharat / state

வாக்களித்த பின் ரூ.1000 பெற்றுக்கொள்ளலாம் - அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அதிரடி - உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின் வாக்காளர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு

கரூர்: உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த பின் வாக்காளர்கள் அனைவரும் பொங்கல் பரிசுத்தொகையான ஆயிரம் ரூபாயை பெற்றுக்கொள்ளலாம் என அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Minister vijayabaskar
Minister vijayabaskar
author img

By

Published : Dec 20, 2019, 4:48 PM IST

தமிழ்நாட்டில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி, கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், ஆண்டான்கோயில் மேற்கு, ஆண்டான்கோயில் புதூர், பள்ளபாளையம், காக்காவாடி போன்ற பகுதிகளில் இரட்டை இலை, சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இன்று பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, வாக்காளர்களிடம் திறந்தவெளி வாகனத்தில் பேசிய அவர், "தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார். ஆனால், திமுகவினர் நீதிமன்றம் சென்று தடையாணை பெற்றனர். எனவே தேர்தலில் வாக்களித்த பின், ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையை வாக்காளர்கள் பெற்றுக் கொள்ளலாம்" என்றார்.

Minister vijayabaskar

இரண்டு அமாவாசை மட்டுமே அதிமுக ஆட்சியில் இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதை மேற்கோள்காட்டிய விஜயபாஸ்கர், தற்போது 36 அம்மாவாசைக்கும் மேலாக ஆட்சி நடைபெற்றுவருவதாகவும், மேலும் 60 அம்மாவாசைக்கு இந்த ஆட்சி தொடரும் என்றும் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, மதுபான கடை மூலம் விஜயபாஸ்கருக்கு தரகு கிடைப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், செந்தில்பாலாஜி கடத்திய 24 ஆயிரம் லெட்டர்ஸ் பேட்டை கேரளா காவல் துறையினர் படித்தார்கள் எனக் கூறினார்.

Intro:ஓட்டு அளித்து விட்டு வந்து ஆயிரம் ரூபாய் பெற்றுக் கொள்ளலாம் - தமிழக போக்குவரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

Body:தமிழகத்தில் வருகின்ற டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் உள்ளாட்சி மன்றத் தேர்தல் அறிவித்த ஒட்டி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

அந்த வகையில் இன்று கரூர் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், ஆண்டான்கோயில் மேற்கு, ஆண்டான்கோயில் புதூர், பள்ளபாளையம், காக்காவாடி, பாகநந்தம், மூக்கனான்குறிச்சி, போன்ற பகுதியில் இரட்டை இலை சின்னத்தில் மற்றும் சுயேச்சை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் அப்பகுதி மக்களிடம் திறந்தவெளி வாகனத்தில் தமிழக போக்குவரத்துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறுகையில்:-

தமிழகத்தில் இன்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டார் அதனை திமுகவினர் நீதிமன்றம் சென்று தடையாணை வழங்கியது எனவே வாக்காளர்கள் தேர்தலில் வாக்களித்து விட்டு ஆயிரம் ரூபாய் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொள்ளவும் என தமிழக போக்குவரத்துறை அமைச்சர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

செந்தில் பாலாஜி இரண்டு அமாவாசை மட்டுமே இந்த ஆட்சி இருக்கும் என்றார் ஆனால் தற்போது 36 அம்மாவாசை மேலாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது மேலும் இன்னும் 60 அம்மாவாசைக்கு இந்த ஆட்சி நடைபெறும் என்றார்.

மேலும் சாராயம் கடையின் மூலம் கமிஷன் வருவதாக என்மேல் குற்றம் காட்டியிருக்கின்றார் செந்தில்பாலாஜி ஆனால் அவர் 24 ஆயிரம் லெட்டர்ஸ் பெட் கடத்தி அதனை கேரளா போலீசார் வைத்து படித்தார்கள் என சரமாரியாக மறைமுகமாக தாக்கினார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.