ETV Bharat / state

அரசு விழாவில் கூடிய கட்சியினரை வெளியேறச் சொன்ன அமைச்சர்! - கரோனா நிவாரண நிதி

கரூர் மாவட்டத்தில் கரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் அதிக கூட்டம் கூடியதால் அப்பகுதியினரைத் தவிர மற்றவர்கள், கட்சியினரை அமைச்சர் செந்தில்பாலாஜி கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார்.

அரசு விழாவில் கூடிய கட்சியினரை வெளியேறச் சொன்ன அமைச்சர்

author img

By

Published : Jun 16, 2021, 3:07 PM IST

Updated : Jun 16, 2021, 3:35 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா நிவாரண நிதி இரண்டாவது தவணை, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று (ஜூன் 15) துவங்கியது. இதனை அந்தந்த தொகுதியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் துவக்கிவைத்து பொதுமக்களுக்கு வழங்கினர்.

இதே போல் கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். அவரை வரவேற்று திமுகவினர் பட்டாசு மற்றும் வாணவேடிக்கை நடத்தினர்.

தனது காரில் இருந்து இறங்கிய செந்தில்பாலாஜியிடம் அங்கு திரண்டிருந்த திமுகவினர் பொருட்களைக் கொடுத்து நிகழ்ச்சியை துவங்கி வைக்க கூறியுள்ளனர். ஆனால் அவர் அதனை வாங்க மறுத்து அருகில் அமைக்கப்பட்டிருந்த விழா மேடைக்குச் சென்றார்.

மேடையில் பேசிய அவர், "இது கரோனா காலம் என்பதால் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக 10 நபர்களைத் தவிர மற்றவர்கள், கட்சியைச் சேர்ந்தவர்கள் உள்பட அனைவரும் கலந்து செல்லுங்கள். ஒரே இடத்தில் கூட்டங்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென அறிவுறுத்தி வருகிறோம். நாமே அந்த விதிமுறைகளை மீற கூடாது.

மேடையில் பேசிய அமைச்சர்

பட்டாசுகள் வெடித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் வேலைவாய்ப்பை இழந்து நோய் தொற்று பரவும் அச்சத்தோடு நாள்தோறும் வாழ்ந்து வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் நாள்தோறும் 500க்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்புக்குள்ளாகி வந்தனர். தற்பொழுது 100 என்ற எண்ணிக்கை அளவுக்கு குறைத்துள்ளது. பூஜ்ஜியம் என்ற இலக்கை அடையும் வரை மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம், தகுந்த இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதுடன் நம்மோடு இருப்பவர்களையும் பாதுகாக்க வேண்டும். கரோனா பரவலைத் தடுக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

அமைச்சரின் இந்த வேண்டுகோளை ஏற்று அங்கிருந்தவர்கள் கலைந்து சென்றனர்.

இதையும் படிங்க: கரோனா தொற்று இறப்புகள் மறைக்கப்படுகின்றனவா? - அறப்போர் இயக்கம் அதிர்ச்சி தகவல்

Last Updated : Jun 16, 2021, 3:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.