ETV Bharat / state

கரூரில் எடப்பாடி பழனிசாமி பெயர் மறைப்பு - அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அதிமுகவினர் குற்றச்சாட்டு - முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பெயர் உள்ள கல்வெட்டு மறைப்பு

கரூர் மாநகராட்சியில் எடப்பாடி பழனிசாமி பெயர் மறைக்கப்பட்ட சம்பவம் அதிமுகவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவினர் குற்றச்சாட்டு
அதிமுகவினர் குற்றச்சாட்டு
author img

By

Published : Jun 19, 2022, 6:59 AM IST

Updated : Jun 19, 2022, 7:50 AM IST

கரூர்: தமிழ்நாட்டில் மிகவும் பழமையான நகராட்சிகளில் கரூர் நகராட்சியும் ஒன்று. கரூர் நகராட்சி 1874ஆம் ஆண்டு நவ.1 ஆம் தேதி தோற்றுவிக்கப்பட்டு தற்போது 142 ஆண்டு கடந்த நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் கரூர் நகராட்சி அலுவலகத்திற்கு ரூ. 7 கோடி மதிப்பீட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். 4 ஆண்டுகளாக நடைபெற்ற கட்டட பணிகள் நிறைவுற்று, அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி 2020ஆம் ஆண்டு டிச.16ஆம் தேதி திறந்து வைத்தார்.

இதனை நினைவூட்டும் வகையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும், முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் பெயரும் பொறிக்கப்பட்டு அலுவலகத்தின் முகப்பில் கல்வெட்டு வைக்கப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத்தேர்தலின்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக அந்த கல்வட்டு மறைக்கப்பட்டது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்த திமுக அரசு, கரூர் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து, வார்டு வரையறை செய்யாமல், ஏற்கனவே நகராட்சியாக இருந்த 48 வார்டுகளைக் கொண்டு கரூர் மாநகராட்சி, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக, அந்த கல்வெட்டு மீண்டும் மறைக்கப்பட்டது. ஆனால், தேர்தல் முடிந்து இன்று வரை மறைக்கப்பட்ட கல்வெட்டு மறைக்கப்பட்டதாகவே உள்ளது.

இதனிடையே நேற்று முன்தினம் (ஜூன்17) கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோவை சாலையில் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சரும், அதிமுக கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பெயரில் நடத்தப்படும் தொண்டு நிறுவனம் சார்பில் கடந்த 4 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வரும் 100-க்கும் மேலான மரங்களுக்கு பாதுகாப்பாக வைக்கப்பட்ட கம்பிக் கூண்டுகளை மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் அகற்றினர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக வழக்கறிஞர் பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிமுகவினர் கரூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து புகாரளித்தனர். மாநகராட்சி நுழைவாயிலில் வைக்கப்பட்டு இருந்த திறப்பு விழா கல்வெட்டு மறைக்கப்பட்டு இருந்ததைக்கண்ட அதிமுகவினர் மறைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதிமுகவினர் குற்றச்சாட்டு

பின்னர் மாநகராட்சி பொறியாளர் நக்கீரனிடம் புகார் அளித்துவிட்டு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முன்னாள் முதலமைச்சர், ரூ. 7 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்த புதிய கட்டட கல்வெட்டை அலுவலர்கள் மறைத்ததன் பின்னணியில், கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரத் துறை அமைச்சருமான செந்தில்பாலாஜியின் தூண்டுதலே காரணம் என குற்றஞ்சாட்டினர்.

இதையும் படிங்க: இரட்டை இலையா? இரண்டு இலையா? ஒற்றை தலைமையை நோக்கி நகரும் அதிமுக...!

Last Updated : Jun 19, 2022, 7:50 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.