ETV Bharat / state

கரூரில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு, அலுவலகங்களில் ED ரெய்டு! - செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர்

கரூர் மாவட்டத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு மற்றும் அலுவலகங்கள் என நான்கு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Minister
ரெய்டு
author img

By

Published : Aug 3, 2023, 2:05 PM IST

கரூரில் செந்தில் பாலாஜியின் உதவியாளர் வீடு, அலுவலகங்களில் ED ரெய்டு!

கரூர்: கரூரில் கடந்த மே 26ஆம் தேதி முதல் ஜூன் 2ஆம் தேதி வரை 8 நாட்கள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்பட்டனர். கடந்த மே 26ஆம் தேதி வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய சென்றபோது, செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் காரை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகளை தாக்கியதாக திமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். செந்தில் பாலாஜிக்கு நெருங்கியவர்களின் வீடு மற்றும் அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள், கணக்கில் வராத ரொக்க பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக கரூரில் கடந்த ஜூன் 13ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் வீடு, அவரது ஆதரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அன்றைக்கே சென்னையில் செந்தில் பாலாஜியிடமும் விசாரணை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் நள்ளிரவில் அவரை அதிரடியாக கைது செய்தனர். அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், சிகிச்சைக்குப் பிறகு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 23ஆம் தேதி கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவராக கருதப்படும் நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். நேற்று (ஆகஸ்ட் 2) திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திமுக வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் வீராசாமிநாதன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விடிய விடிய சுமார் 18 மணி நேரமாக சோதனை நடத்தினர்.

இந்நிலையில் கரூரில் இன்று(ஆகஸ்ட் 3) காலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் சண்முகம் என்பவரது வீடு மற்றும் கரூர் செங்குந்தபுரம் சாலையில் உள்ள சங்கரின் நிதி நிறுவன அலுவலகம், கரூர் சின்னாண்டங்கோயில் சாலையில் உள்ள தனலட்சுமி கிரானைட் உரிமையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையை தொடங்கியுள்ளனர். காலை 10 மணி முதல் சோதனை நடைபெற்று வருகிறது.

கரூர் - மதுரை நெடுஞ்சாலையில் அம்பாள் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள செந்தில் பாலாஜியின் உதவியாளர் சங்கர் சண்முகத்தின் வீட்டில் துணை ராணுவ வீரர்களின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று ஆடிப்பெருக்கு விழாவை ஒட்டி, சங்கர் நேற்று இரவே வெளியூர் சென்றுவிட்டதால், அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளரிடம் மாற்று சாவியைப் பெற்று சோதனை நடத்தி வருகின்றனர்.

சங்கரின் வீட்டில் உள்ள லாக்கர்கள் ஆகியவற்றை பார்வையிட, சாவி இல்லாத காரணத்தினால் லாக்கர் பூட்டை உடைத்து, ஏதேனும் ஆவணங்கள், கணக்கில் வராத பணம் ஆகியவை உள்ளதா? என்பதை ஆராய அமலாக்கத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதேபோல் கோவை ராமநாதபுரத்தில் டாஸ்மாக் சூப்பர்வைசர் முத்துபாலன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவையில் மட்டும் மூன்று இடங்களில் சோதனை நடப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க: வருமான வரித்துறை அதிகாரிகள் மீது தாக்குதல்: கரூர் நீதிமன்றத்தில் திமுகவினர் சரண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.