ETV Bharat / state

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இனி 'பாலம்' அமைப்பு பலனளிக்கும்! - அமைச்சர் செந்தில்பாலாஜி

author img

By

Published : Mar 8, 2022, 6:44 PM IST

வேலை தேடுபவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் கிடைக்கும் விதமாக, கரூரில் 'பாலம்' எனும் அமைப்பினைத் தொடங்கி வைத்து பேசிய அமைச்சர் செந்தில்பாலாஜி, அவரது அரசியல் வாழ்வில் இன்று (மார்ச் 8) ஒரு பொன்னான நாளாகும் என்று பேசியுள்ளார்.

அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

கரூர்: வேலை தேடுபவர்களுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே இணைப்பை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் இந்தியத் தொழில் கூட்டமைப்பினர் இணைந்து நகர்ப்புற வாழ்வாதார மையத்தின் மூலம் தமிழ்நாட்டில் முதல் முறையாக 'பாலம்' அமைப்பின் தொடக்க விழா மார்ச் 8ஆம் தேதியான இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது.

வேலை வாய்ப்பளிக்கும் 'பாலம்'

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்துகொண்டு பாலம் அமைப்பினை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அதில், 'தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் முதல்முறையாகத் தொடங்கப்பட்டுள்ள பாலம் அமைப்புத்திட்டத்தின் மூலம், வேலைதேடும் இளைஞர்களுக்கு அந்தந்த கிராம ஊராட்சி அலுவலகங்களில் வைக்கப்படும் பாலம் அமைப்பின் விண்ணப்பப் பெட்டியில் விண்ணப்பங்களை அளித்து, அதன்மூலம் வேலைவாய்ப்பைப் பெறலாம்.

அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

விரைவில் 'வீடு வழங்கும் திட்டம்'

எனது அரசியல் வாழ்வில் இந்நாள் பொன்னாள் ஆகும். எனது முக்கிய இரண்டு குறிக்கோள்களில் ஒன்று இன்று நிறைவேறியுள்ளது எனில், அது கரூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்குப் பாலம் அமைப்பு தொடங்கப்பட்டது தான். இதேபோல, வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்' என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இளங்கோ, மாணிக்கம், சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, புகலூர் நகராட்சி சேர்மன் சேகர், பள்ளப்பட்டி நகராட்சி சேர்மன் ஜான், இந்தியத் தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: கோகுல்ராஜ் கொலை வழக்கு: யுவராஜூக்கு 3 ஆயுள் தண்டனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.