ETV Bharat / state

'தூய்மை கரூர்' திட்டப்பணி ஆய்வு; அமைச்சர் செந்தில் பாலாஜி அதிரடி! - karur latest news

கரூர் நகராட்சியை மேம்படுத்தத் தொடங்கப்பட்ட 'தூய்மை கரூர்' திட்டப்பணிகளை, அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு செய்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி
அமைச்சர் செந்தில் பாலாஜி
author img

By

Published : Oct 10, 2021, 7:22 PM IST

கரூர்: கரூர் சட்டப்பேரவை தொகுதிக்கு தனிக்கவனம் செலுத்தும் வகையில், இரண்டு நாட்களுக்கு முன்பு "தூய்மை கரூர்" எனும் புதிய திட்டத்தை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கி வைத்தார்.

அதன்படி கரூர் நகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் தினந்தோறும் தூய்மைப் பணியை மேற்கொள்ள சிறப்புக் கவனம் செலுத்தப்படுகிறது.

ஆய்வுப் பணியில் ஈடுபட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான காணொலி

திட்டத்தைக் கண்காணிக்கும் பொருட்டு வாரத்தில் ஒருநாள், ஒரு வார்டில் நடைபெறும் பணிகள் அமைச்சரால் ஆய்வு செய்யப்படுகின்றது.

இந்நிலையில் இன்று (அக்.10) கரூர் நகராட்சிக்குட்பட்ட 25ஆவது வார்டில் அமைந்துள்ள கௌரிபுரம், 80 அடி ரோடு சாலையில் நடைபெறும் தூய்மைப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அமைச்சர் செந்தில் பாலாஜியின் இந்தச் செயல் பல்வேறு தரப்பினரிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதையும் படிங்க: இன்ஜினியரிங் கவுன்சிலிங்: 50 விழுக்காடு இடங்கள் கூட நிரம்பவில்லை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.