கரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற எம்ஆர்வி டிரஸ்ட்டின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழாவினை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.
பின்னர் நிகழ்ச்சி மேடையில் பேசிய அவர், "எம்ஆர்வி டிரஸ்ட் சார்பில் கரூர் நகர பகுதியில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நட நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இதுவரை 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. கல்வி தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய் ஏழை, எளிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.
மாற்றுத்திறனாளிகளுக்கு இரண்டு இருசக்கர வாகனங்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட மாணவர்கள் பயன்பெறும் வகையில் எம்ஆர்வி டிரஸ்ட் சார்பில் யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி வங்கி மற்றும் சீருடை பணியாளர்கள் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி வகுப்பு விரைவில் தொடங்கப்படும். இது எனது மிகப் பெரிய கனவாக உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: கருவிழி மாற்று அறுவை சிகிச்சை: மதுரை அரசு இராசாசி மருத்துவமனை சாதனை