கரூர்: கரூர் மாவட்டம் மண்மங்கலம் வட்டம் பஞ்சமாதேவி அரசு காலனியில் வசிக்கும் சுப்பிரமணி, ஐஸ் வியாபாரம் செய்து தனது குடும்பத்தை நடத்திவருகிறார். இவரது மகன் மாரிமுத்து, வாங்கல் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து 12ஆம் வகுப்பில் 933 மதிப்பெண்கள் பெற்றார். நீட் தேர்வில் 297 மதிப்பெண்கள் பெற்றார்.
மருத்துவப்படிப்பிற்கான கலந்தாய்வில் கலந்துகொண்ட இவருக்கு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 விழுக்காடு இடஒதுக்கீட்டில், கரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவப்படிப்பிற்கான இடம் கிடைத்தது.
குடும்ப வறுமை காரணமாக கல்லூரியில் சேர்வதற்கான கட்டணம் கட்ட முடியாத நிலையில் இருந்த மாணவன் குறித்து அறிந்த போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், மாணவனையும் அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து மாரிமுத்துவின் கல்விக்கட்டணத்தை முழுவதையும் ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தார்.
மேலும், முதலாம் ஆண்டிற்கான கட்டணமாக 20 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தை இன்று மாணவரிடன் அமைச்சர் வழங்கினார். எதிர்பாராத இந்த உதவியால் நெகிழ்ந்துபோன மாணவர், அவரது பெற்றோர் போக்குவரத்து துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திமுக-பாஜக இடையே பக்... பக்...! கரூரில் காவலர் கொடி அணிவகுப்பு!