கரூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி வளாகத்தில் 2019 ஜூன் 5ஆம் தேதியன்று மருத்துவக் கல்லூரி முதல்வரைக் கண்டித்து செவிலியர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக மருத்துவக் கல்லூரி முதல்வர் போராட்டத்தில் ஈடுபட்ட நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்துள்ளார். இதனைக் கண்டித்து நேற்று செவிலியர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக அரசு அலுவலர்கள் சங்கமும் போராட்டத்தில் ஈடுபட்டது.
அப்போது செவிலியர் நல்லம்மாள் இது குறித்து பேசியபோது, ‘பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் தள்ளப்பட்டோம். தற்போது எங்களது கோரிக்கைகளைக் கேட்காமல் நான்கு பேரை பணியிடை நீக்கம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது.
மேலும் கடந்த முறை போராட்டத்தில் ஈடுபட்டாலும் நாங்கள் நோயாளிக்குச் செய்ய வேண்டிய பணிகளைச் செய்து முடித்தோம். குறிப்பாக இரவு பகல் பாராமல் எங்களது பணியைத் தொடர்ச்சியாகச் செய்தோம். அப்படி இருந்தும் எங்களைப் பழிவாங்கும் நோக்குடன் முதல்வர் பணியிடம் நீக்கம் செய்தது கண்டிக்கத்தக்கது. அதை உடனே திரும்பப் பெற வேண்டும்’ என்று கூறினார்.