ETV Bharat / state

போராடி வென்ற மயான பாதை: போராட்டத்தில் உயிரிழந்தவரின் உடல் அடக்கம்

கரூரில் சுதந்திர தினத்தன்று மயான பாதை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டபோது ஒருவர் உயிரிழந்ததை அடுத்து பாதை அமைக்கப்பட்டது.

போராடி வென்ற மயான பாதை
போராடி வென்ற மயான பாதை
author img

By

Published : Aug 17, 2021, 8:10 AM IST

Updated : Aug 17, 2021, 9:09 AM IST

கரூர்: மண்மங்கலம் தாலுகாவுக்கு உள்பட்ட நெரூர் தென்பாகம் கிராமத்தில் உள்ள வேடிச்சிபாளையத்தில் பட்டியலின மக்களுக்கு சொந்தமான சுடுகாட்டுப் பாதையை சிலர் ஆக்கிரமித்து விவசாயம் செய்துவருவதாகக் கூறி அந்தப் பாதையை மீட்டுத்தரக் கோரி ஆகஸ்ட் 15ஆம் தேதி இரவு சுடுகாட்டில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து இரண்டாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்துவந்த மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வந்த வருவாய் துறை அலுவலர்களிடம் போராட்டக்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எதிர்பாராத விதமாக வேலுசாமி (45) என்பவர் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

man body buried after protest for crematorium in karur
மயான பாதை வேண்டி போராட்டம்

பாதை அமைக்க உத்தரவு:

இதைத்தொடர்ந்து கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் சம்பவ இடத்திற்கு சென்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போதும் பொதுமக்கள் பாதையை மீட்டுத்தர வேண்டும் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

போராடி வென்ற மயான பாதை

வேலுசாமி உயிரிழந்த சம்பவத்துக்காக வருத்தம் தெரிவித்த மாவட்ட ஆட்சியர் பாதையை உடனடியாக அமைத்து கொடுக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இறந்தவருக்கு உடற்கூராய்வு:

இதற்கிடையில் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்த வேலுச்சாமியின் உடற்கூராய்வு நடைபெற்றது. அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்து வேலுச்சாமியின் உறவினர்கள், பல்வேறு பட்டியலின அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் ஆறுதல் தெரிவிக்க கூடினர்.

இதனை அடுத்து ஐந்துக்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து பாதை அமைக்கும் பணி விரைவாக நடைபெற்றது. சுமார் இருபதுக்கும் மேற்பட்ட லாரிகளில் வண்டல் மண் கொட்டப்பட்டு பாதை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.

இறந்தவரின் உடல் அடக்கம்:

மாலை உடற்கூராய்வு நிறைவடைந்து வேடிச்சிபாளையம் மயானத்திற்கு உயிரிழந்தவரின் உடல் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில் உடலை அடக்கம் செய்ய அலுவலர்கள் முயற்சித்தனர்.

அப்போது சாலையை முழுமையாக அமைத்த பிறகு வேலுச்சாமியின் உடலை அடக்கம் செய்வோம் என பொதுமக்கள் கூறினர்.

உயிரிழந்தவருக்கு பல்வேறு தரப்பினர் அஞ்சலி செலுத்திய நிலையில் சுமார் 2 மணி நேர தாமதத்துக்குப் பிறகு முழுமையாக சாலை அமைக்கும் பணி நிறைவடைந்தது. இதனைத்தொடர்ந்து உறவினர்கள், பொதுமக்கள் முன்னிலையில் வேலுச்சாமியின் உடல் இரவு 7 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

மயான பாதை அமைப்பு:

கரூர் ஆட்சியர் உத்தரவின்பேரில் கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் சந்தியா, மண்மங்கலம் வட்டாட்சியர் செந்தில், கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜ், வாங்கல் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் சுமார் 7 மணி வரை இருந்து பாதை அமைக்கும் பணிகளை விரைவுபடுத்தியப் பின்னர் மயான பாதை அமைக்கப்பட்டது.

மயான பாதை

முடிவுக்கு வந்த பிரச்னை:

மயான பாதை அமைப்பதற்குத் தேவையான நிலத்தை சம்பந்தப்பட்ட தனிநபர்கள் அரசுக்கு வழங்குவதாக ஒத்துகொண்டதையடுத்து பிரச்னை முடிவுக்கு வந்தது.

போராட்டத்தில் உயிர் நீத்த வேலுச்சாமியின் திருமணமாகாத இரு மகன்கள், மனைவி ஆகியோருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நிவாரண உதவி வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

சுதந்திர தினத்தில் மயான பாதை வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டு உயிரிழந்த வேலுச்சாமியின் உடலை போராடி பெற்ற பாதையில் அவரது உறவினர்கள் தூக்கிச் சென்ற சம்பவம் பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: சீர்காழி அருகே சுருக்குமடி வலைக்கு தடை கோரும் 20 கிராம மக்கள்

Last Updated : Aug 17, 2021, 9:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.