கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யத்தில் வேட்பாளர் மோகன்ராஜ் ஆதரித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பரப்புரை மேற்கொண்டார்.
இறுதியாக வேலாயுதம்பாளையத்தில் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரையை முடித்துக்கொண்டு மேடையிலிருந்து கீழே இறங்கிய போது திடீரென மூன்று நபர்கள் கமல் மீது முட்டை ,செருப்பு மற்றும் கல் வீசினார்கள்.
அதனைப் பார்த்த மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் கல், முட்டை வீசிய நபர்களை சுற்றிவளைத்து தாக்க முயன்றனர். அப்போது அங்கிருந்த காவல்துறையினர் அவர்களை மீட்டு விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதனையடுத்து மக்கள் நீதி மய்யத்தின் தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த மாவட்ட கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து தொண்டர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சினேகன் கூறியதாவது:-
கமல்ஹாசன் பரப்புரைக்காக வேலாயுதம்பாளையம் வந்தார் அப்பொழுது அவரை சிலர் தாக்க முயன்றனர் இதனையடுத்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கண்காணிப்பாளர் உறுதி அளித்திருக்கிறார் என்றார்.