கரூர்
கரூர் மக்களவை தொகுதியின் வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என்றும் தேர்தல் அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்.
கருர் மக்களவை தொகுதியின் தேர்தலின் வாக்குப்பதிவு கடந்த 18ம் தேதி நடைபெற்றது. கரூர் மக்களவை தொகுதியில் கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், வேடசந்தூர், விராலிமலை, மணப்பாறை ஆகிய ஆறு சட்டப் பேரவை தொகுதிகளில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை கரூர் அடுத்த தளவாய்பாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கரூர் மக்களவை தொகுதியின் தேசிய முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஜோதிமணி வாக்கு எண்ணும் மையத்தை பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கரூர் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பாதுகாப்பின்மையாக வைக்கப்பட்டுள்ளது. வழக்கமாக மூன்றடுக்கு அல்லது 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு இருக்கும் .
ஆனால் கரூர் மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை காற்றில் பறக்கவிட்டு அதிகாரிகள் அலட்சிய போக்கை கடைப்பிடித்து வருவதால் இந்த மையத்தில் குறைந்த அளவில் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தேர்தல் முதல் முதல் இன்றுவரை தேர்தல் நடத்தும் அலுவலரும் கரூர் மாவட்ட ஆட்சியருமான அன்பழகன் மற்றும் காவல் துறை உயர்அதிகாரிகள் ஆளுங்கட்சியினர் அராஜகத்திற்கு பணிந்து போகின்றவரவர்களாகவும் அதன் ஒரு பகுதியாக இருக்கிறார்கள்.
தேர்தல் விதிமுறைகளை கரூர் மாவட்டத்தில் தேர்தல் பணியாற்றுகிற அதிகாரிகள் காலில் போட்டு மிதிப்பவர்களாக இருக்கிற சூழ்நிலை நிலவுகிறது.
எனக்கு போன் செய்து தேர்தலை நிறுத்தவேன் என மாவட்ட தேர்தல் அதிகாரி மிரட்டுகிற அளவுக்கு ஆளுங்கட்சிக்கும் மந்திரிக்கும் வேட்பாளர் தம்பிதுறைக்கும் ஆதரவாக செயல்படுகிறார் .
பொதுமக்கள் அதிக அளவில் வாக்களித்து இருப்பதை பார்க்கும் பொழுது இந்த அராஜகத்துக்கு எதிராகவும் எனக்கு ஆதரவாகவும் வாக்கு செலுத்தியுள்ளார்கள் என்பதையே காட்டுகிறது .
வாக்கு எண்ணும் மையத்தில் முன் கேட்டில் 3 நபர்களும் வாக்குப் பெட்டி வைக்கப்பட்டு உள்ள அறையில் மூன்று பேரும் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
குறைந்தபட்ச துப்பாக்கி ஏந்திய போலீசார் கூட பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த படவில்லை.
சாதாரண மக்கள் கூட வாக்குப்பெட்டி எந்திரங்கள் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர்.
பாதுகாப்பு அலட்சியப் படுத்தப் பட்டுள்ளது
இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி மற்றும் இந்திய தேர்தல் ஆணைய அதிகாரி ஆகியோரிடம் புகார் அளித்துள்ளேன். தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.
மேலும் கடந்த காலங்களில் வாக்கு எண்ணும் மையங்களில் அரங்கேறிய அத்துமீறல்கள் மற்றும் அராஜகங்களை குறிப்பிட்ட ஜோதிமணி
மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் காவல்துறையினர் உள்நோக்கத்துடன் செயல்படுவதாக குற்றச்சாட்டினார்.
காங்கிரஸ் கட்சி சார்பிலும் திமுக சார்பிலும் கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியை மாற்ற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் தேர்தல் ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது தேர்தல் ஆணையம் நல்ல முடிவு எடுக்கும் என நம்புகிறோம் இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் கரூர் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்தார்.
வீடியோ FTP மூலம் அனுப்பப்பட்டுள்ளது.
File name:-
TN_KRR_01_21_JOTHIMANI_VISIT_ELECTION_BOX_ROOM_AND_BYTE_7205677