கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 14 ஊராட்சிகளில், மொத்தம் 132 வார்டுகள் உள்ளன. இதில், ஆண் வாக்காளர்கள் 31ஆயிரத்து 561 பேர், பெண் வாக்காளர்கள் 34 ஆயிரத்து 952 பேர் உள்ளனர். இந்த ஊராட்சி ஒன்றியத்தில் இதர வாக்காளர்கள் கிடையாது. ஆக மொத்தம் 66 ஆயிரத்து 513 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 114 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு 323 வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட உள்ளன. இதற்காக இன்று வாக்குப்பெட்டிகளை சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.
கரூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் மொத்தம் 13 ஊராட்சி ஒன்றிய வார்டுகளும் ஒரு மாவட்ட ஊராட்சி வார்டும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வாக்குப் பெட்டிகளை சீரமைக்கும் பணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரும் தேர்தல் அலுவலருமான பாலச்சந்திரன் மேற்பார்வையில் நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பரிசோதனை!