Karur honour killing: கரூர் மாவட்டம், குளித்தலை அருகே சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடாசலம் என்பவரது மகள் நந்தினி (19).
இவரது தாயின் இறப்பிக்குப் பிறகு, கடந்த 2018ஆம் ஆண்டு முதல் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் காலண்ணம்பட்டியில் தங்கி தனியார் ஸ்பின்னிங் மில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை நந்தினி காதலித்து வந்ததாக, தனது குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து நந்தினியின் தந்தை வெங்கடாசலம், தனது மனைவியின் தங்கை கணவரான ராஜ் (41) என்பவரிடம் தெரிவித்துள்ளார்.
இதனை அடுத்து ராஜ், நந்தினியிடம் காதலை கைவிட்டு, பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மணந்து கொள்ள வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
2018 ஜூன் 13ஆம் தேதி குளித்தலை அருகே சுப்பிரமணியபுரத்தில் உள்ள விவசாயத் தோட்டத்தில் மண்ணெண்ணெய்யை நந்தினி மீது ஊற்றி தீ வைத்துவிட்டு, ராஜ் தப்பி ஓடி விட்டார்.
தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நந்தினி, மருத்துவமனையில் அளித்த மரண வாக்கு மூலத்தின் அடிப்படையில் காவல் துறையினர் ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு மாவட்ட மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று (டிசம்பர் 28) வழக்கை விசாரித்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளி ராஜ்-க்கு ஆயுள் தண்டனையும் 1,000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: Tiruvottriyur building collapse: 'காலத்தினாற் செய்த நன்றி': மக்களைக் காப்பாற்றிய நபருக்கு முதலமைச்சர் பாராட்டு