ETV Bharat / state

அண்ணா நகர் புறவழிச் சாலைக்கு மீண்டும் சிக்கல்

குளித்தலை நகராட்சி கையகப்படுத்திய இடத்திற்கு மதிப்பீட்டு தொகை வழங்காததால் அண்ணா நகர் புறவழிச் சாலை மீண்டும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

க
author img

By

Published : Jul 12, 2021, 2:32 PM IST

கரூர்: குளித்தலை தெற்கு மடவாளர் தெருவைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற வட்டாட்சியர் சீனிவாசன். குளித்தலை உழவர் சந்தை முதல் மணப்பாறை ரயில்வே கேட் வரை செல்லும் அண்ணா நகர் புறவழிச் சாலையின் நடுவில் இவருக்கு சொந்தமாக 236 அடி நீளம் 36 அடி அகலம் கொண்ட இடம் உள்ளது. எந்த ஒரு முன் அறிவிப்பின்றியும் தனக்குச் சொந்தமான இடத்தில் குளித்தலை நகராட்சி நிர்வாகம் சாலை அமைத்துவிட்டதாக பல வருடங்களுக்கு முன்பு இவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு

இந்த வழக்கு தொடர்பான இறுதி விசாரணையின் போது சீனிவாசனுக்கு சாதகமாகவே தீர்ப்பு வழங்கப்பட்டது. இருப்பினும் அவரது நிலம் அவருக்கு ஒப்படைக்கப்படவில்லை. இது குறித்து நீதிமன்றத்தில் அவர் மீண்டும் மனு தாக்கல் செய்தார். இதன் பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அவருக்கு சொந்தமான இடத்தை 2006ஆம் ஆண்டு சுவாதீனம் எடுத்துக் கொடுக்கப்பட்டது. இதையடுத்து அவர் தனக்கு சொந்தமான இடத்தை வேலி போட்டு அடைத்து விட்டார்.

சிக்கலான சாலை

இதனால் இச்சாலையில் யாரும் பயணிக்க முடியாத நிலை ஏற்பட்டது. போக்குவரத்திற்கு பயனுள்ள வழித்தடமாக இருந்த இந்த சாலை அடைக்கப்பட்டதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் என அனைவரும் சிரமத்திற்குள்ளானார்கள்.

அடைக்கப்பட்ட பகுதிக்கு உரிய மதிப்பீடு செய்து அதற்கான தொகையை அந்த இடத்தின் உரிமையாளருக்கு வழங்கி, பாதையைப் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர் சாலையைத் திறக்க தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

4 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் சாலை திறப்பு

இந்த நிலையில் நீதிமன்றத்தில் இடைக்கால உத்தரவு பெற்று நகராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் அடைக்கப்பட்ட பகுதி அகற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு மீண்டும் கொண்டுவரப்பட்டது.

நீதிமன்ற உத்தரவு விவரம் அடங்கிய பேனர்
நீதிமன்ற உத்தரவு விவரம் அடங்கிய பேனர்

சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த அடைக்கப்பட்ட சாலை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதால், சாலை திறக்க போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாலை மூடப்படும் நிலை

இதையடுத்து அடைக்கப்பட்ட இடத்திற்கான மதிப்பீட்டுத் தொகை உரிமையாளருக்கு இன்னும் வழங்கப்படாத காரணத்தால் தற்காலிகமாக திறந்து கொள்ள பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.

உத்தரவு விவரம் அடங்கிய விளம்பர பேனரை சீனிவாசனின் குடும்பத்தார் தங்களுக்குச் சொந்தமான இடத்தின் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு வைத்துள்ளனர்.

பெரும் முயற்சி எடுத்து திறக்கப்பட்ட இந்தப் பாதையை மீண்டும் அடைக்காமல் இருக்கும் வகையில் இடத்தின் உரிமையாளருக்கு உரிய மதிப்பீட்டு தொகையை வழங்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: மேகதாது அணை பிரச்னை தொடர்பாக இன்று அனைத்து கட்சிக் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.