கரூரில் பிப் 19ஆம் தேதி கல்யாணஸ்ரீ வெங்கடரமணசாமி கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தன. மேலும், ஹம்ச வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு பெருமாள் அருள்பாலித்தார்.
கரூர் மாசிமக திருத்தேர் விழா இன்று (சனிக்கிழமை) காலை 8.45 மணியளவில் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் இன்று (பிப் 27) நடைபெற்றது. இதனையடுத்து பக்தர்கள் திரளாகக் கூடி கோவிந்தா கோவிந்தா என்று பக்தி பரவசத்தோடு திருத்தேர் வடம் பிடித்து இழுத்தனர்.
கரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு அருள் பெற்றனர். அடுத்தமாதம் மார்ச் 1ஆம் தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.
அன்றைய தினம் கோவில் தெப்பக்குளத்தில் பெருமாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மார்ச் 8ஆம் தேதி புஷ்பயாகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.தேர் திருவிழாவையொட்டி ஏராளமான காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:திருச்செந்தூரில் மாசி திருவிழா: கட்டுப்பாடுகள் அறிவித்த கோயில் நிர்வாகம்!