ETV Bharat / state

கரூர் துணை மின் நிலையத்தில் கட்டுக்கடங்காத தீ - போராடி அணைத்த தீயணைப்புத் துறையினர்! - கரூரில் துணை மின் நிலையத்தில் தீ

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.

fire accident
fire accident
author img

By

Published : Dec 3, 2019, 6:02 PM IST

கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்திற்கு மின்சாரம் வழங்கக் கூடிய, துணை மின் நிலையம் அதன் எதிர்புறம் செயல்பட்டு வருகிறது. இந்தத் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக, ஒரு டிரான்ஸ்ஃபார்மர் தீப்பிடித்து எரிந்தது.

இது குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு வாகனங்களில் வந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்புத் துறை வீரர்கள் நீண்ட நேரம் போராடி, தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதனால் அந்தப் பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

கரூர் துணை மின் நிலையத்தில் தீ

இந்தத் தீ விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் பார்வையிட்டார். தீ மேலும் பரவாமல் இருக்க தீயணைப்பு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையும் படிங்க: மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் - வானிலை ஆய்வு மைய இயக்குநர் அறிவிப்பு!

Intro:தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனத்தில் துணை மின் நிலையம் தீ விபத்துBody:கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்த தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது இந்த நிறுவனத்திற்கு மின்சாரம் வழங்கக் கூடிய துணை மின் நிலையம் அதன் எதிர்புறம் செயல்பட்டு வருகிறது.

இந்த துணை மின் நிலையத்தில் இருக்கக்கூடிய மின்மாற்றியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து மின்மாற்றியில் உள்ளே இருக்கக்கூடிய 47 ஆயிரம் லிட்டர் ஆயில் தீப்பிடித்து தொடர்ந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது இதனால் இந்த பகுதி முழுவதுமே புகை மண்டலமாக மாறி இருந்தது தகவலறிந்து கரூர் மற்றும் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலையத்தில்யிருந்து வந்த தீயணைப்புத் துறை வீரர்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைக்க முடியாமல் திணறி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் டிரான்ஸ்பார்மரில் இருந்த ஆயில் முழுவதுமாக இருந்துவிட்டதால் தீ பரவுவது தற்போது குறைந்து கொண்டோ வருகிறது தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாவட்ட ஆட்சியர் அன்பழகன் நேரில் பார்வையிட்டு தீ மேலும் பரவாமல் தடுப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசித்து அதனைப் பார்வையிட்டார் தீயணைப்பு அதற்கான பணியில் ஈடுபட்டு மேலும் தீயணைப்பு துறையினர் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் இருக்க தண்ணீரை பீச்சி அடித்து யானை தன்னை மேலும் துணை மின் நிலையத்திற்கு வரக்கூடிய மின்பகிர்மான மின்சாரங்கள் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தெரிவித்தார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.