கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர். 50 அடி சாலையில், 2010ஆம் ஆண்டு முதல் 60க்கும் மேற்பட்ட தரைக்கடை வியாபாரிகள் காய்கறி, பழ வியாபாரம் செய்து வருகின்றனர். இந்நிலையில், கரூர் நகராட்சி நிர்வாகம் அந்த கடைகளை திடீரென்று அகற்றி மீண்டும் அதே இடத்தில் கடைகள் தடை விதித்துள்ளது.
இதற்கு மாற்றாக வியாபாரத்திற்கு சம்பந்தமே இல்லாத ஒரு பகுதியை ஒதுக்கி அங்கே கடை அமைக்க நகராட்சி நிர்வாகம் ஏற்பாடு செய்தது. இதை ஏற்க மறுத்த தரைக்கடை வியாபாரிகள், மீண்டும் அதே இடத்தில் கடை அமைப்பதற்கான முயற்சியை இன்று (செப்டம்பர் 4) மேற்கொண்டனர்.
இதையடுத்து கடை அமைக்கப்பட்டால் அதனை அப்புறப்படுத்த காவல்துறையினர் குவிக்கப்பட்டு தயார் நிலையில் இருந்து வருகின்றனர், இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பழுதான செல்போனை விற்ற தனியார் மொபைல் கடை மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!