ETV Bharat / state

'அதிமுக கரைவேட்டி கட்டாதவர்கள் கரூர் காவல்துறையினர்' - செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு - karur business man muthukumar

கரூரில் கரை வேட்டி கட்டாத அதிமுக நிர்வாகிகளாக காவல்துறையினர் செயல்பட்டு வருவதாக செந்தில் பாலாஜி எம்எல்ஏ குற்றஞ்சாட்டியுள்ளார்.

karur mla senthil balaji
அதிமுக கரைவேட்டி காட்டதவர்கள் கரூர் காவல்துறையினர்' - செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு
author img

By

Published : Oct 28, 2020, 2:11 PM IST

கரூர்: கரூரிலுள்ள தொழிலதிபரான முத்துக்குமார் சமீபத்தில் கரூர் மத்திய கிழக்கு நகரத்தில் இருந்து 1,000 நபர்களுடன் திமுகவில் இணைைந்தார். இதையடுத்து முத்துக்குமாரை அதிமுகவில் சேருமாறு அக்கட்சியினர் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தனது கார் ஓட்டுநரான அதிமுகவை சேர்ந்த மகேந்திரன் என்பவருக்கு ரூ. 13 லட்சம் கொடுத்துள்ளதை முத்துக்குமார் திருப்பி கேட்டுள்ளார். தன்னிடம் முத்துக்குமார் பணம் கேட்டு மிரட்டுவதாக மகேந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், கரூர் நகர காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்துள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக கரூர் காவல் நிலையத்திற்கு சென்று விசாரித்த எம்எல்ஏ செந்தில் பாலாஜி, திமுகவினர் மீது அதிமுகவினர் பொய் வழங்கு போடுவதாக தெரிவித்தார். மேலும், கரூரில் காவல்துறையினர் கரை வேட்டி கட்டாத அதிமுக நிர்வாகிகளாக செயல்பட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார்.

இதையும் படிங்க: எய்ம்ஸ் மருத்துவக் குழுவில் மரு.சுப்பையா சண்முகம் இருப்பது பெண்களை அவமதிக்கும் செயல்'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.