ETV Bharat / state

நீட் தேர்வு எழுதிய மாணவி தற்கொலை! - தொடரும் நீட் தற்கொலைகள்

கரூர் மாவட்டம் கடவூர் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

death
death
author img

By

Published : Aug 12, 2022, 12:31 PM IST

கரூர்: கரூர் மாவட்டம் கடவூர் கொள்ளுதணிப்பட்டியை சேர்ந்த ப்ரீத்தி (18) என்ற மாணவி கடந்த ஆண்டு 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு, நீட் தேர்வு எழுதியுள்ளார். தேர்வில் தோல்வியடைந்த நிலையில், வேங்காம்பட்டி பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி மீண்டும் நீட் தேர்வு எழுத தயாராகி வந்தார்.

மாணவி இரண்டாவது முறையாக கடந்த மாதம் நீட் தேர்வு எழுதினார். இன்னும் சில தினங்களில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளது. இந்நிலையில் , நேற்று(ஆகஸ்ட் 11) வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலையை கைவிடுக
தற்கொலையை கைவிடுக

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற லாலாப்பேட்டை போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை நிறைவு பெற்று மாணவியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: போலீஸ் எனக் கூறி 24 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மூவருக்கு போலீஸ் வலைவீச்சு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.