ETV Bharat / state

வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி - ஜோதிமணி எம்.பி தர்ணா - karur local body election

கரூர்: க. பரமத்தியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, எம்.எல்.ஏ. செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜோதிமணி எம்.பி தர்ணா
ஜோதிமணி எம்.பி தர்ணா
author img

By

Published : Jan 3, 2020, 3:30 PM IST

தமிழ்நாட்டில் டிசம்பர் 27, 30 ஆகிய தேதியில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் தொடங்கி இன்றும் நடைபெற்றுவருகிறது. கரூர் மாவட்டத்தில் க. பரமத்தியில் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி மக்களவை உறுப்பினர் ஜோதிமணி, அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் பரமத்தி பேருந்து நிலையம் அருகில் உள்ள சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி, ’ஒன்றிய பெருந்தலைவரை தேர்ந்தெடுப்பதற்கு ஒன்பது நபருடைய ஒப்பந்தம் வேண்டும். தற்போது அதிமுகவிலிருந்து ஏழு ஒன்றிய தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஆனால் திமுக - காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்ற 2 ஒன்றிய தலைவர்களின் வெற்றியையும் சேர்த்து அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிமணி எம்.பி தர்ணா

அதிகாலையிலிருந்து எட்டு மணி நேரமாக போராடுகிறோம். வேட்பாளர்களும் எங்களுடன் இணைந்து போராடி வருகின்றனர். சரியான தீர்வு கிடைக்கும் வரை உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்’ என்றார்.

இதையும் படிங்க: வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு - மக்கள் போராட்டம்

Intro:நாங்கள் வெற்றி பெற்ற ஒன்றிய தலைவரை அதிமுக வெற்றி பெற்றதாக அறிவிப்பு - உள்ளிருப்பு போராட்டத்தில் ஜோதிமணி.Body:கரூர் மாவட்டத்தில் கடந்த டிச, 27 மற்றும் 30 ஆகிய இரு தினங்களில் ஊராட்சிமன்ற வாக்குப்பதிவு கரூர் மாவட்டத்தில் உள்ள எட்டு ஒன்றியங்கள் ஆன கரூர்,அரவக்குறிச்சி, தாந்தோணி, க. பரமத்தி, கிருஷ்ணராயபுரம், குளித்தலை,கடவூர் மற்றும் தோகைமலை ஆகிய ஒன்றியங்களுக்கு நடைபெற்றது.

மேலும் இந்த வாக்குப்பதிவு எண்ணிக்கை நேற்று கரூர் மாவட்டத்தில் உள்ள அந்தந்த ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வந்தது. அதில் க.பரமத்தி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் க. பரமத்தி யிலுள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

தற்பொழுது நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி இருப்பதாக கூறி கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி பரமத்தி பேருந்து நிலையம் அருகில் இருக்கக்கூடிய சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் கட்சி நிர்வாகிகள் என 300க்கும் மேற்பட்டோர் கலந்து உள்ளனர்.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜோதிமணி கூறுகையில் :-

ஒன்றிய பெருந்தலைவர் தேர்ந்தெடுப்பதற்கு 9 நபருடைய ஒப்பந்தம் வேண்டும் தற்போது அதிமுகவிடம் ஏழு ஒன்றிய தலைவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் வெற்றி பெற்ற 2 ஒன்றிய தலைவர்களின் வெற்றி அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாலையிலிருந்து 8 மணி நேரமாக போராடி கொண்டு வருகிறோம் வேட்பாளர்களும் எங்களுடன் இணைந்து போராடி வருகின்றனர். சட்டமன்ற உறுப்பினர் செந்தில் பாலாஜி, நானும் இணைந்து போராடி வருகின்றோம் தேர்தல் ஆணையம் கூறி இருக்கக்கூடிய சட்ட விதிமுறைகளை பின்பற்றும் வகையில் உள்ளே செல்லாமல் வெளியில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றோம். கரூர் மாவட்டத்தில் இருந்து ஒட்டுமொத்த காவல்துறை அனைத்தையும் கொண்டு வந்து நிறுத்தி விட்டு தேர்தல் அதிகாரிகள் கதவை பூட்டி விட்டு உள்ளே இருந்த அறிவித்துவிட்டு செல்கிறார்கள் என குற்றம்சாட்டினார்.

அதுமட்டுமில்லாது கடவூர் ஒன்றியம் தாந்தோணி ஒன்றியம் இரண்டிலும் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் வாக்கு எண்ணிக்கையில் இதேபோல் தவறு நடந்திருக்கிறது சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகின்றனர், இதற்குப் பெயர் தேர்தலா ? இதற்கு மக்கள் வரிசையில் நின்று வாக்களிக்க வேண்டும்..! தேர்தல் ஆணையம் கூறி வெற்றி பெற்றதாக அவர்களை அறிவித்துக் கொள்ளலாம் என ட்விட்டரில் பதிவிட்டது மட்டுமில்லாது பேட்டியிலும் ஆவேசமாக பேசினார்.

தேர்தல் வாக்கு எண்ணிக்கை குறித்து நாங்கள் நீதிமன்றத்திடம் அறிந்திருக்கின்றோம், இரண்டு முறை கேடுகள் நடைபெற்றிருக்கின்றன இதில் சரியான தீர்வு கிடைக்கும் வரை உள்ளிருப்பு போராட்டம் தொடரும் என கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.