கரூர் மாவட்டத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஜனவரி 11ஆம் தேதி மனநலம் பாதித்த 16 வயது இளம்பெண் தனியாக இருந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி அதே பகுதியைச் சேர்ந்த காளிமுத்து(65) என்பவர், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பெற்றோர் புகார்: வீடுதிரும்பிய பெற்றோர் தனது மகளுக்கு நடந்த கொடுமையை நேரில் கண்டு, காளிமுத்துவை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அப்பெண்ணினை அழைத்து வந்து புகார் அளித்தனர். இந்த வழக்கு கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது .
![மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறிய முதியவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை.](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-krr-02-mahila-fast-court-posco-case-judgement-pic-scr-tn10050_10052022163254_1005f_1652180574_528.jpg)
மேலும் அவர் மனநலம் பாதிக்கப்பட்ட பாலியல் தொல்லைக்கு ஆளான இளம் பெண்ணுக்கு தமிழ்நாடு அரசு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினார்.
இதையும் படிங்க: திசையன்விளை மாணவி தற்கொலை!