கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் கோயில் கொங்கு ஏழு தலங்களுள் முதன்மையானதும், பாடல் பெற்ற தலமுமான கரூர் கல்யாண பசுபதீசுவரர் ஆலய குடமுழுக்கு வருகின்ற டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆலயத்தின் உள்ளே 54 குண்டங்கள், வேதிகைகள் உடனான யாகசாலை அமைப்பு தொடங்க முகூர்த்தக்கால் ஊன்றும் நிகழ்ச்சி, திருப்பணிக் குழுத் தலைவர் தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தலைமையில் இன்று (நவ. 05) நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் அரவிந்த் தங்கவேல், குடமுழுக்கு குழுவினர், யாகசாலை அமைப்பு, ஆலய செயல் அலுவலர், சிவாச்சாரியார்கள், சிப்பந்திகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.