ETV Bharat / state

கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் ! - கல்லூரி நிர்வாகம்

கரூர்: அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பொருளியல் துறைத் தலைவர் இளங்கோவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாக அவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

கரூர்
author img

By

Published : Mar 26, 2019, 5:10 PM IST

கரூர் மாவட்டம் தான்தோன்றி அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்று, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது.இந்தக் கல்லூரியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர்.

இதில் பொருளியல் துறையில் இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வு மாணவ மாணவிகள் உள்ளனர். இந்தத் துறையின் தலைவராக இருப்பவர் முனைவர் இளங்கோவன் (52).

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கலை முதலாமாண்டு, இரண்டாமாண்டு மாணவிகளிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை இளங்கோவன் கொடுத்துள்ளார். இதனால் மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர்.

இந்நிலையில் புகார் மீது கல்லூரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இன்று காலை அரசு கலை கல்லூரி முன்பு திரண்டனர். இதனையடுத்து மாணவ மாணவிகள் கரூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர்.

Intro:கல்லூரி பேராசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார்

Body:கரூர் மாவட்டம் தான்தோன்றி மலை அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பொருளியல் துறை துறை தலைவர் இளங்கோவன் பாலியல் தொல்லை இதனால் மாணவிகள் அவர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார்.

தான்தோன்றி அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி அந்தஸ்து பெற்ற பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் 60 ஆண்டுகள் பழமை பெற்ற கல்லூரி.

இந்த கல்லூரியில் 500க்கும் மேற்பட்ட இருபால் மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பொருளியல் துறையில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டயப் படிப்புடன் ஆய்வு படிக்கும் மாணவ மாணவிகள் உள்ளனர்.

இக்கல்லூரியின் பொருளில் துறையின் தலைவராக இருப்பவர் முனைவர் இளங்கோவன் வயது 52.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இளங்கலை முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவிகளிடம் பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் கொடுத்ததாக கூறப்படுகிறது இதனை அடுத்து கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர் அப்புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று அரசு கலை கல்லூரி முன்பு திரண்ட மாணவ மாணவியர் கரூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்க திரண்டனர்.

இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய கல்லூரி மாணவர் சுரேந்திரன் கூறுகையில்:-

பொருளியல் துறை இளங்கோவன் மாணவிகளிடம் ஆபாசமாகப் பேசுவதும் பாலியல் ரீதியாக மாணவிகளிடம் நடந்ததால் தற்போது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் காவல்துறையும் இன்று மாலைக்குள் கைது செய்வதாக உறுதி அளித்து உள்ளார்கள் சம்பந்தப்பட்ட பேராசிரியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பணி நீக்கம் செய்ய வேண்டும் இல்லாவிட்டால் மாணவர்கள் திரட்டி பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம் என தெரிவித்தார் இதனிடையே அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு புகார் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட பேராசிரியர் கோபன் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பேட்டி:- சுரேந்திரன் அரசு கலை கல்லூரி மாணவன்

பாலியலில் ஈடுபட பேராசிரியர் பயோடேட்டா மற்றும் புகைப்படம் மேலும் கல்லூரி வளாக வீடியோ ஆகியவை mail மூலம் அனுப்பப்பட்டுள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.