கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் கல்வி சீர் வழங்கும் விழாவும், பள்ளியின் தலைமை ஆசிரியர் செல்வகண்ணனுக்கு தேசிய நல்லாசிரியர் விருது பெற்றமைக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவுக்கு அந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் புத்தக அலமாரி, மின்விசிறி, சிறுவர்களுக்கான நாற்காலி உள்ளிட்ட சுமார் ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பிலான பொருட்களை க.பரமத்தி கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினர்.
இதற்கு தலைமை ஆசிரியர் செல்வகண்ணன் பெற்றுக்கொண்டு நன்றி தெரிவித்தார்.
இதையும் படிங்க: பேருந்தின் மேற்கூரையில் ஒழுகிய மழைநீர்: பயணிகள் அவதி!