உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பெருந்தொற்றுக் காரணமாக, தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. கரூர் மாவட்டத்தில் இதுவரை 42 பேர் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைப் பெற்று வந்தனர்.
போதிய இடவசதி, உபகரணங்கள் இல்லாததால் திண்டுக்கல் மாவட்டம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரும் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தனர்.
தமிழ்நாட்டில் இரண்டாவது அதிக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தனர். தற்பொழுது தமிழ்நாட்டில் அதிக நோயாளிகளை குணப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்து, புதிய சாதனை செய்துள்ளது, கரூர் அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி.
கரூரில் 42 நோயாளிகள், திண்டுக்கல்லில் 80 நோயாளிகள், நாமக்கல்லில் 59 நோயாளிகள் ஆகமொத்தம் 171 நபர் சிகிச்சைப் பெற்று வந்தனர். தற்பொழுது 156 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். தற்போது அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 6 நபர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 8 நபர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: