கரூர் மாவட்டத்தை அடுத்த வெங்கமேடு விவிஜியில் உள்ள அன்னை சத்யா தெருவில் வசித்துவந்தவர் மருதை மகன் கோவிந்தராஜ் (வயது 40). இவர் சென்னை, தில்லை நகரில் தங்கி தனியார் உணவகத்தில் கடந்த மூன்று வருடங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் சென்னையிலிருந்து கரூருக்கு கடந்த ஜுன் 19ஆம் தேதி திரும்பினார். சொந்த ஊர் வந்தவுடன் தானாகவே முன்வந்து கரூர் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ந்துள்ளார்.
அங்கு இவருக்கு கரோனோ நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில் இன்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்த கோவிந்தராஜின் உடல் மருத்துவமனையில் உள்ள சவ கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரில் முதன்முதலாக கரோனா தீநுண்மிக்கு ஒருவர் பலியான விவகாரம் கரூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகளை தொலைவிலிருந்து கண்காணிக்கும் அதிநவீன கருவி அறிமுகம்!