கரூர் மாவட்டம் ராம்நகரில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். இறந்தவர்களின் சடலங்களை மீட்ட காவல் துறையினர் கரூர் அரசு மருத்துவனைக்கு அனுப்பிவைத்தனர். வீட்டில் பற்றி எரிந்த தீ காரணமாக சுவாசப் பிரச்னையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தைகள் இறந்திருப்பதாக உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதபோன்று, முத்துலட்சுமியின் உடலிலுள்ள சாம்பலை சேகரித்த தடயவியல் துறையினர் இறப்பு நடந்ததற்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். உடலில் உள்ள பாகங்களை பரிசோதனை செய்ய திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து சிறப்பு வல்லுநர்கள் வந்துள்ளனர்.
விபத்து குறித்து உயிரிழந்த முத்துலட்சுமியின் பெற்றோரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் முத்துலட்சுமியின் உடற்கூறாய்வு முடிந்த பின்னர் முழுமையான காரணம் தெரியும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பால் 118 பேர் உயிரிழப்பு