ETV Bharat / state

கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு: குடிநீர் விநியோகம் பாதிப்பு

author img

By

Published : Jan 5, 2020, 11:33 AM IST

கரூர்: மதுரை செல்லக்கூடிய காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மதுரை, திண்டுக்கல், மேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

கரூர் கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு கரூர் குடிநீர் விநியோகம் பாதிப்பு கரூர் - மதுரை குடிநீர் பாதிப்பு Karur Water Pump Damage Karur Drinking Water Supplly Stoped Karur- Madurai Drinking Water Supply Stopped
Karur Water Pump Damage

கரூர் மாவட்டம் லாலாபேட்டை காவேரி ஆற்றிலிருந்து மதுரை, மேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம் சுமார் 340 ஹெச்.பி. மோட்டார் பம்பிங் மூலமாக இங்கிருந்து குடிநீர் செல்கிறது. கடந்த பத்தாண்டுகளாக இந்த கூட்டுக் குடிநீர் குழாய் செயல்படுகிறது.

இந்நிலையில், லாலாபேட்டை காவிரி ஆற்றின் கரையிலிருந்து மகிளிப்பட்டி, புனவாசிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிவருகிறது. இதையடுத்து, லாலாபேட்டையில் கரூர் பழைய சாலையோரத்தில் நேற்றிரவு குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சுமார் 30 அடி உயரத்திற்கு தண்ணீர் பீய்ச்சி அடித்து செயற்கை மழைபோல் தண்ணீர் பெய்தது.

இதனால் சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் கூட்டுக்குடிநீர் பராமரிக்கும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் அளித்தனர். அதன்பெயரில் உடனடியாக 340 ஹெச்.பி. மோட்டார் நிறுத்தப்பட்டது.

இருப்பினும், உடைப்பு ஏற்பட்ட குழாயில் தொடர்ந்து இரவுமுதல் தண்ணீர் வெளியேறிவருகிறது. குழாயை சரிசெய்வதற்காக ஆங்காங்கே உள்ள ஏர் வால்வு குழாயில் தண்ணீர் திறந்துவிடுகின்றனர்.

அந்தவகையில், மகிளிப்பட்டி பிள்ளையார்கோவில் அருகே ராட்சத குழாயில் தண்ணீர் திறந்துவிடுவதால் அருகில் உள்ள விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

உடைப்பு ஏற்பட்டுள்ள கூட்டுக் குடிநீர் குழாய்

மேலும் நேற்று இரவுமுதல் குடிநீர் வீணாகிவருவதால் இங்கிருந்து செல்லக்கூடிய காவிரி கூட்டு குடிநீர் மதுரை, திண்டுக்கல், மேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது.

குழாய் உடைப்பு சரிசெய்யும் வரை அங்குள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். குழாய் உடைப்பு ஏற்படாமல் குடிநீரை தென் மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்துவருகின்றனர்.

இதையும் படிங்க:

பொதுமக்கள் தண்ணீர் தொட்டியில் குடிநீர் பிடிக்க சூயெஸ் நிறுவனம் எதிர்ப்பு

Intro:மதுரை செல்லக்கூடிய கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மதுரை, திண்டுக்கல், மேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் பாதிப்புBody:காவிரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

மதுரை செல்லக்கூடிய கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மதுரை, திண்டுக்கல், மேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தம்.

கரூர் மாவட்டம் லாலாபேட்டை, காவேரி ஆற்றில் இருந்து மதுரை, மேலூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு ராட்சத குழாய் மூலம். சுமார் 340 எச்பி மோட்டார்  பம்பிங் மூலமாக இங்க இருந்து குடிநீர் செல்கிறது.  கடந்த பத்து வருடங்களாக கூட்டுக் குடிநீர் குழாய் செயல்படுகிறது. இந்நிலையில் லாலாபேட்டை காவிரி ஆற்றின்  கரையிலிருந்து  லாலாபேட்டை, மகிளிப்பட்டி புனவாசிப்பட்டி  உள்ளிட்ட பகுதிகளில்  அடிக்கடி  குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருகிறது. இந்நிலையில் லால்பேட்டையில் கரூர் பழைய சாலை ஓரத்தில் நேற்று இரவு குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சுமார் 30 அடி உயரத்திற்கு  தண்ணீர் பீச்சி அடித்து வெளியேறியது. மேலும்   தண்ணீர் செயற்கை மழைபோல் தண்ணீர் பெய்தது. சாலை முழுவதும் தண்ணீர் தேங்கியது. உடனடியாக அப்பகுதி மக்கள் கூட்டுக்குடிநீர் பராமரிக்கும் குடிநீர் வடிகால் வாரியத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அன்ன் பெயரில் உடனடியாக 340 எச்பி மோட்டார்  நிறுத்தப்பட்டது. உடைப்பு ஏற்ப்பட்ட குழாயில் தொடர்ந்து இரவு முதல் தண்ணீர் வெளியேறி வருகிறது.  குழாயை சரி செய்வதற்காக ஆங்காங்கே உள்ள குழாய் ஏர் வால்வு குழாயில் தண்ணீர் திறந்து விடுகின்றனர். மகிளிப்பட்டி  பிள்ளையார்கோவில் அருகே ராட்சத குழாயில் தண்ணீர் திறந்து விடுவதால் அருகில் உள்ள விளை நிலங்களில் அந்த தண்ணீர் புகுந்து விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர். மேலும் நேற்று இரவு முதல் குடிநீர் வீணாகி வருவதால் இங்கிருந்து செல்லக்கூடிய காவிரி கூட்டு குடிநீர் மதுரை, திண்டுக்கல், மேலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்ப்பட்டுள்ளது. குழாய் உடைப்பு  சரி செய்யும் வரை அங்கு உள்ள பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும். அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்.  குழாய் உடைப்பு ஏற்படாமல் குடிதண்ணீரை தென்மாவட்டங்களுக்கு அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.