கரூர் மாவட்ட திமுகவிலிருந்து பிரிந்து 300க்கும் மேற்பட்டோர் அதிமுக செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
கரூர் தாந்தோணி ஊராட்சியைச் சேர்ந்த திமுக மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் தினேஷ், கலைஞர் பகுத்தறிவு பாசறை அமைப்பாளர் தாந்தோணி நகர இளைஞரணி துணை அமைப்பாளர் ஆனந்தன் ஆகியோர் தலைமையில் கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கரூர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
அவர்களை வரவேற்ற அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவர்களுக்கு அதிமுக உறுப்பினர் அட்டை, சால்வை ஆகியவற்றை அளித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
அமமுகவிலிருந்து பிரிந்து செந்தில் பாலாஜி திமுகவில் தன்னை இணைந்துக் கொண்ட பின்னர், கருத்து வேறுபாட்டால் திமுகவினர் தொடர்ந்து அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவுக்கு வருவது வாடிக்கையாகி வருவதாகக் கூறப்படுகிறது.
சென்ற ஆண்டிலிருந்து தற்போது வரை குறைந்தது சுமார் ஐந்தாயிரம் நபர்களுக்கு மேல் திமுவிலிருந்து விலகி அதிமுகவில் தங்களை இணைந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சுவர் விளம்பர விவகாரம்: திமுக - அதிமுகவினர் இடையே மோதல்