ETV Bharat / state

15 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்து பொதுமக்களுக்கு இடையூறு: ஆட்சியரிடம் தேமுதிக மனு!

கரூர்: தொண்டமாங்கினம் ஊராட்சிக்குட்பட்ட கடன்வாங்கியூரில் 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கிராம மக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தேமுதிகவினர் கிராம மக்களுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

karur dmdk party gave plea to district collector against kadanvangiyur land acquisition
author img

By

Published : Nov 4, 2019, 11:18 PM IST

கரூர் மாவட்டம் தொண்டமாங்கினம் ஊராட்சிக்குட்பட்ட கடன்வாங்கியூரில் சிலர் 15 சென்ட் நத்தம் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், அவர்களை எதிர்த்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி அம்மாவட்ட தேமுதிக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. இது குறித்து பேசிய தேமுதிக பிரமுகர், ”கடன்வாங்கியூரில் சுமார் 20 குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்த ஊரில் உள்ள சிலர் 15 சென்ட் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்தும், முள்வேலி அமைத்தும் அந்தப் பகுதியில் பொதுமக்களை செல்லவிடாமல் தடுக்கிறார்கள். அவ்வழியாக மக்கள் சென்றால் அவர்கள் கொலை மிரட்டல் விடுக்கின்றனர்.

மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த தேமுதிகவினர்

மேலும், குடிநீர் எடுக்கச் செல்வதற்கும், இறந்தவர்களின் உடலைக் கொண்டு செல்வதற்கும் மிகவும் சிரமமாக உள்ளது. முள்வேலி அமைத்திருப்பதால் மருத்துவமனைக்குச் செல்லவும் அப்பகுதி மக்களால் இயலவில்லை. இது தொடர்பாக முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தும் எந்த பதிலும் இதுவரை இல்லை. எனவே மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கவிட்டால் அனைவரையும் ஒன்றிணைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார்.

இதையும் படிங்க: சிலம்பத்தில் உலக சாதனை செய்த கரூர் இளைஞர்

Intro:மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் குடி போக்குவோம் கிராம மக்கள்

Body:கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் தொண்டமாங்கினம் ஊராட்சிக்கு உட்பட்ட கடன்வாங்கியூரில் நத்தம் புலனாய்வு என் 90 ஆக்கிரமித்துள்ளனர். கடன்வாங்கியூரில் மோகன் ஆறுமுகம் முருகன் வெள்ளைச்சாமி நடராஜன் கணேசன் ராஜலிங்கம் பரமேஸ்வர் முள்வேலி அமைத்து அந்த பகுதியில் செல்ல விடாமல் தடுப்பதாகும் மேலும் குடிநீருக்கும் இறந்தவரின் சட்டங்களை கொண்டு வழியில் முள்வேலி அமைப்பதனால் மருத்துவமனைக்கு செல்லும் முடியவில்லை என்றும் அந்தக் கிராமத்து மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இது தொடர்பாக முதலமைச்சரின் மக்கள் குறைதீர் கூட்டத்தில் மனு அளித்தும் எந்த ஒரு பதிலும் இல்லை என்றும் மாவட்ட ஆட்சியர் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிபோகும் நிலை ஏற்படும் என்று மனு அளித்தனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.