ETV Bharat / state

கரூர் தொகுதிகள் வலம் : தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...! - காவிரி

சங்க காலம் தொட்டு செழித்திருந்த ஊர் கரூர் (கரவூர்). இராண்டாயிரம் ஆண்டுகள் பழமையான வரலாறு கொண்ட இம்மாவட்டம், தங்க ஆபரண தொழிலுக்குப் பெயர் போனதையும், பண்டைய ரோமாபுரியுடன் வாணிபத்தொடர்பில் இருந்த வரலாற்றையும் விளக்கி வருகின்றன அமராவதி நதியில் கிடைத்த தங்க காசுகள். காவிரியும், அமராவதி நதியும் கரூரின் இயற்கை அரண்களாக இருக்கின்றன. கொங்கு தேசமான கோவையில் இருந்த கரூர், ஆங்கிலேயர் காலத்தில் திருச்சியுடன் இணைக்கப்பட்டது. மீண்டும் 1996 ஆம் ஆண்டு திருச்சியில் இருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமானது. ஆயத்த ஆடை தொழிலுக்கும், பேருந்து கட்டுமானத்துக்கும் பெயர் பெற்ற மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். தமிழ்நாட்டின் மையப் பகுதியில் இருக்கும் கரூர் மாவட்டத்தின் எல்லைகளாக வடக்கே நாமக்கல், தெற்கே திண்டுக்கல், கிழக்கே திருச்சிராப்பள்ளி, மேற்கே ஈரோடு ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.

karur district watch
கரூர் தொகுதிகள் வலம்
author img

By

Published : Mar 23, 2021, 12:52 PM IST

Updated : Mar 24, 2021, 6:52 AM IST

வாசல்:

காலத்தின் மாற்றங்களை உள்வாங்கி தன்னைத் தகவமைத்துக் கொண்டு வரும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம் (தனி), குளித்தலை ஆகிய நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

தொகுதிகள் உலா:

அரவக்குறிச்சி: முருங்கைக்காய் விளைச்சலுக்குப் பெயர் பெற்றது இந்தத் தொகுதி. அரவக்குறிச்சி சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் முருங்கைக்காய் பிற மாவட்டங்களுக்கு மட்டுமில்லாமல், அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தமிழ்நாடு அரசின் காகித ஆலை இத்தொகுதிக்குட்பட்ட புகளூரில் இயங்கி வருகின்றது.

அரவக்குறிச்சி பகுதியில் முருங்கைக்காய்களுக்கு நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும், முருங்கைக்காய் பொடி தயாரிக்கும் தொழிற்சாலை தொடங்க வேண்டும் என்பது விவாசாயிகளின் கோரிக்கை. தொகுதியிலுள்ள தாதம்பாளையம் ஏரி புதர்கள் மண்டி, காடுகள் போல காட்சி தருகிறது, அதனைத் தூர்வாரி, அமராவதி நதியிலிருந்து உபரி நீரை ஏரிக்குக் கொண்டு வரும் திட்டம், 18 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. சாக்கடையாக மாறிவரும் நங்காஞ்சி ஆற்றைப் பாதுகாக்க வேண்டும். பள்ளப்பட்டி சுற்றுவட்டார மாணவர்களின் உயர் கல்விக்காக அங்கு கலைக் கல்லூரியைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் உள்ளன அரவக்குறிச்சி தொகுதிவாசிகளிடம்.

கரூர்: ஆயத்த ஆடை உற்பத்திக்குப் பெயர் பெற்றது இத்தொகுதி. ஜவுளி உற்பத்தி மூலம் ஆண்டுக்கு ஏறக்குறைய 4 ஆயிரம் கோடி அந்நிய செலாவணியை ஈட்டுகிறது. இங்குள்ள ஜவுளிப் பூங்காவில் இயங்கிவந்த சாயப்பட்டறை, கழிவுநீர் பிரச்னை காரணமாக மூடப்பட்டுள்ளது. இதனால், 10 ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர்.

கரூர் தொகுதிகள் வலம் : தேர்தல் 2021; எதிர்பார்ப்பும் களநிலவரமும்...!

சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய சாயப்பட்டறையை அரசு அமைத்துத் தர வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர் தொகுதிவாசிகள். கரூரில் பாயும் காவிரி ஆற்றில், கரூர்- திருச்சி பகுதிகளை இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்ட வேண்டும் என்பது தொகுதிவாசிகளின் நீண்ட கால கோரிக்கை.

இதற்காக நிதிகள் ஒதுக்கப்பட்டும் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. அதேபோல, அமராவதி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம், இணைப்பு பாலம் கட்டப்படாததால் மக்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை. கரூரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை இருபெரும் கட்சிகளின் குடுமிபிடி மோதலால் தொடங்கப்படாமலே இருக்கிறது.

நீதிமன்றத் தடையையும் மீறி, காவிரியில் நடைபெற்று வரும் மணல் திருட்டை தடுக்க வேண்டும், தொகுதிக்குள் அரசு தொழில்நுட்பக் கல்லூரி ஒன்று தொடங்கப்பட வேண்டும். சிறப்பு நிலை நகராட்சியாகவுள்ள கரூரை மாநகராட்சியாக அறிவிக்க வேண்டும் என்பவை தொகுதிவாசிகளின் பிரதான கோரிக்கையாகவுள்ளது.

கிருஷ்ணராயபுரம் (தனி): காவிரியால் வளம் பெறும் தொகுதி இது. காவிரியில் கட்டப்பட்டுள்ள மாயனூர் கதவணை இந்தத் தொகுதியில் அமைந்துள்ளது. பிரதான தொழில் விவசாயம். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கடலை, சூரியகாந்தி போன்ற பயிர்கள் விளைகின்றன. பிற வேளாண் பயிர்களுக்கு உதவி செய்வது போல, வெற்றிலை விவசாயிகளுக்கும் அரசு மானியக் கடன் வழங்கி, வெற்றிலையை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்டக்கால கோரிக்கை.

இதற்கு அரசு இன்னும் செவிசாய்க்காமல் உள்ளது. கடவூர் மலைப் பகுதியில் சாம்பல் தேவாங்கு சரணாலயம் அமைக்க வேண்டும்; தோகமலை ஊராட்சி ஒன்றியங்களில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும், காவிரியில் நடைபெறும் மணல் திருட்டை தடுத்து நிறுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் தீர்க்கப்படாமல் தொடரவே செய்கின்றன.

குளித்தலை: காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் தொகுதி. மறைந்த முதலமைச்சர் கருணாநிதியை முதன் முதலில் சட்டப்பேரவைக்கு அனுப்பி வைத்தத் தொகுதி. விவசாயமே பிரதானத் தொழில். மாற்று தொழில் வாய்ப்புகளுக்கு வழியில்லை. குளித்தலை நகராட்சி பகுதியில் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்பது இத்தொகுதிவாசிகளின் பிரதான கோரிக்கை.

தற்போது கோயில் நிலத்தில் வாடகைக்கு இயங்கி வரும் பேருந்து நிலையத்திற்கு மாற்றாக, குளித்தலை சுங்ககேட் பகுதியில் பேருந்து நிலையம் கட்ட, மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்டது. தொடர்ந்து தற்போதைய முதலமைச்சர், துணை முதலமைச்சரால் எம்ஜிஆர் நுற்றாண்டு விழாவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என, மீண்டும் கூட்டாக அறிவிக்கப்பட்டது.

இத்தொகுதி மக்களின், இந்த 25 ஆண்டுகால கோரிக்கை இன்னும் தீர்ந்தபாடில்லை. வாகன ஓட்டிகளை சிரமத்திற்குள்ளாக்கி வரும் குளித்தலை மணப்பாறை நெடுஞ்சாலையிலுள்ள ரயில்வே கேட் பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். குளித்தலை நகராட்சி உழவர் சந்தைக்குச் செல்லும் பாதையைப் பயன்படுத்த தனி நபரால் நீதிமன்ற தடை பெறப்பட்டுள்ளது.

இதனால் விவசாயிகள், பொதுமக்கள் அதிகம் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இப்பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். மணல் அள்ளிச் செல்லும் லாரிகளால் ஏற்படும் விபத்துக்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பவை குளித்தலையின் பிரதானக் கோரிக்கைகள்.

களநிலவரம்:

விவசாயம், ஆயத்த ஆடை நிறுவனங்களின் ஜவுளி ஏற்றுமதி, பேருந்து கட்டுமானம், டிஎன்எல்பி என, கரூர் வளம் கொழித்து வந்தாலும், சாயப்பட்டறை பிரச்னைகள், காவிரி, அமராவதி ஆறுகளில் மணல் திருட்டு, மாவட்டத்தின் சில தொகுதிகளில் தொழில் வாய்ப்புகள் இல்லாதது என தேவைகளும் இருக்கவே செய்கின்றன.

கரூரில் உள்ள நான்கு சட்டப்பேரவைத் தொகுதிகளில் இரண்டில் அதிமுகவும், இரண்டில் திமுகவும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுகவில் போட்டியிட்டு வென்ற செந்தில் பாலாஜி, 2019 இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வென்றார்.

கரூரில் மக்கள் செல்வாக்குள்ள செந்தில் பாலாஜி திமுகவை வெற்றி பெற வைக்கும் முனைப்பில் இருக்கிறார். போக்குவரத்து துறை அமைச்சரின் மாவட்டம் என்பதால், அதனை நிரூபிக்க அதிமுக தரப்பும் காய் நகர்த்துகிறது. பத்தாண்டு கால ஆட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தராதது, அதிமுக கூட்டணி மீது மக்களுக்கு இருக்கும் அதிருப்தி, கரூர் தொகுதியை திமுகவிற்குச் சாதகமாக மாற்றியுள்ளது.

Last Updated : Mar 24, 2021, 6:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.