சமீபத்தில், காவல் துறையில் பணியாற்றிவரும் 54 அலுவலர்களைப் பதவி உயர்வு, பணிமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.
தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பு வெளியாகவுள்ள நிலையில் ஐபிஎஸ் அலுவலர்களின் இடமாறுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
கரூர் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிவந்த பகலவன் சென்னை பெருநகர காவல் துறைக்கு மாற்றப்பட்டார். சென்னை கடலோர அமலாக்கப்பிரிவு கண்காணிப்பாளராக இருந்த எஸ்.எஸ். மகேஸ்வரன் கரூர் காவல் கண்காணிப்பாளராக மாற்றம்செய்யப்பட்டார்.
இந்நிலையில், நேற்று (பிப். 19) கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளராக எஸ்.எஸ். மகேஸ்வரன் பதவியேற்றுக்கொண்டார். முன்னதாக மாவட்ட காவல் துறை சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
இதையும் படிங்க: புத்தகக் காட்சியில் புகுந்த பிக்பாஸ்