கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட சின்ன கவுண்டனூர் பகுதியில் வசித்துவரும் பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளான தெருவிளக்கு, சாலை, சாக்கடை, சுடுகாட்டுக்கு பாதை, கழிவறை உள்ளிட்டவை இல்லாததால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இதைக் கேட்டு அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் மாவட்ட அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
ஆகவே இதைக் கண்டித்து சின்ன கவுண்டனூர் பகுதி மக்களுக்கு ஆதரவாக தலித் விடுதலை இயக்கத்தினர் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: பட்டியலின மக்களை அவதூறாகப் பேசியதாக ஆர்.எஸ். பாரதி மீது புகார்!