ETV Bharat / state

1959ல் கருணாநிதி எழுதிய ஆய்வுக்குறிப்பு..நெகிழ்ச்சியில் ட்விட்டரில் பதிவிட்ட கரூர் ஆட்சியர்!

1959ஆம் ஆண்டு தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்து முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய ஆய்வுக்குறிப்பை கண்டு நெகிழ்ச்சியடைந்த கரூர் மாவட்ட ஆட்சியர், அதனை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

karur-colletor-shares-former-cm-karunanidhi-note
1959ல் கருணாநிதி எழுதிய ஆய்வுக்குறிப்பு..நெகிழ்ச்சியில் ட்விட்டரில் பதிவிட்ட கரூர் ஆட்சியர்!
author img

By

Published : Jun 19, 2021, 10:59 PM IST

கரூர்: கரூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக மரு.த. பிரபுசங்கர் கடந்த ஜூன் 18ஆம் தேதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற அன்று, கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர், கருப்பத்தூர் ஊராட்சி வேங்காம்பட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியையும் ஆய்வு செய்தார்.

இதுபோன்ற ஆய்வுகளின்போது, ஆய்வுக்குறிப்புகளை எழுதுவது வழக்கம். அந்த வகையில் மாவட்ட ஆட்சியர் பள்ளியின் குறிப்பேட்டில் குறிப்புகளை எழுதும்போது, 1959ஆம் ஆண்டு குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடக்கப்பள்ளியை ஆய்வு செய்து எழுதிய குறிப்பு கண்ணில் பட்டுள்ளது.

karur colletor shares former cm karunanidhi note
கலைஞர் தன் கைப்பட எழுதிய ஆய்வுக்குறிப்பு

இதனை புகைப்படமாக எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஆட்சியர், "எனது முதல் ஆய்வின்போது இந்த புதையலை கண்டேன். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எழுதிய குறிப்பு இது" என குறிப்பிட்டுள்ளார். இந்தப்புகைப்படம் திமுக தொண்டர்களால் அதிகளவில் இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

கரூர் ஆட்சியர் ட்வீட்

ஆய்வு குறிப்பேட்டை பத்திரமாக பராமரித்த அப்பள்ளியின் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் தனது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மேடை நாடகம் தொடங்கி திரையுலகம் வரை: கருணாநிதியின் கலைப்பயணம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.